நாகப்பட்டினம் டிசம்பர் 7
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 15 திட்டப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள
அடுக்கு மாடி குடியிருப்புகளை
காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்து பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கிட்டு ஆணைகளை
வழங்கியதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் நாகூர் நகரம் சம்பாத்தோட்டம்
திட்டப் பகுதிகளில் 25 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கிட்டு
ஆணைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண் தம்புராஜ்
வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என். கௌதமன் ,தமிழ்நாடு தாட்கோ கழகத் தலைவர் உ. மதிவாணன்,
கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் வி. பி. நாகை மாலி,
நகர் மன்ற துணைத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

