நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் டிசம்பர் 5
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 185 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.


அதனைத்தொடர்ந்து வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கீழ்வேளுர் வட்டம் பிரதாபராமபுரம் கிராமத்தைச்சேர்ந்த பி.மஞ்சு என்பருக்கு ஆதரவற்ற பெண்ணுக்கு திருமண உதவித்தொகை ரூ.75,000-க்கான ஆணையினையும், நாகப்பட்டினம் வடக்கு பால்பண்ணைச்சேரியைச்சேர்ந்த ஹெச்.கதிர் என்பவருக்கு மின்சார நாற்கர்லி பழுதடைந்ததை சரிசெய்திட ரூ.25,000-க்கான காசோலையினையும், கொட்டாரக்குடி நடுத்தெருவைச்சேர்ந்த செல்வராணி என்பவருக்கு ரூ.20,060 மதிப்பிலான படுக்கை வசதிகளுடன் கூடிய இறக்கி ஏற்றும் கட்டிலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

