சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 30 இணைகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருமணத்தை நடத்தி வைக்கும் விழாவினை தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு காயாரோகண சுவாமி மற்றும் நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலில் 25 இணைகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 04 சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 30 இணைகளுக்கு இன்று இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருமணத்தை நடத்தி வைக்கும் விழாவினை தொடங்கி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு காயாரோகண சுவாமி மற்றும் நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலில் 25 இணைகளுக்கு நடைபெற்ற திருமணத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் கலந்துக் கொண்டனர்.


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தமிழக தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களையும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருவதனை, தொடர்ந்து 2022-23 ஆம் ஆண்டின் சட்டமன்ற பேரவையின் வரவு செலவு கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சட்டமன்ற அறிவிப்பின்படி ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு திருக்கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினங்கள் அனைத்தும் இந்து சமயம் மற்றும் அறநிலைய கொடைகள் சட்ட பிரிவின் கீழ் நிதிமாற்றம் செய்யவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு அனுமதி அளித்து மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் ஆணையிடப்பட்டது.அதனைத்தொர்ந்து இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட இணை ஆணையர் மண்டலத்தில் 25 ஏழை எளிய இணைகளுக்கு அருள்மிகு காயாரோகண சுவாமி மற்றும் நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலில் நடைபெற்ற திருமண விழாவில் திருமாங்கல்யம், வெள்ளி மெட்டி, பித்தளை காமாட்சி விளக்கு, படி, குங்குமசிமிழ், பித்தளை குத்துவிளக்கு மற்றும் சமையல் பாத்திரங்கள் அடங்கிய சீர்வரிசைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் மணமக்களுக்கு வழங்கி வாழ்த்தினார்.
இந்த விழாவில் ஒன்றிய குழு தலைவர் வே.அனுசுயா நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் இரா.மாரிமுத்து, மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் க.இராமு, உதவி ஆணையர்; ப.ராணி, திருவாரூர் மாவட்ட உதவி ஆணையர்; ப.மணவழகன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

