நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெண்ணியம் போற்றுவோம் என்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கலந்துகொண்டு பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 2
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பெண்ணியம் போற்றுவோம் என்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று கலந்துகொண்டு பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் உரிமைப்பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது. அதனைத் தொடர்ந்து நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெண்ணியம் போற்றுவோம் என்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



பொதுவாக மாணவ,மாணவிகள் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற அனைத்து தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாற்ற வேண்டும். மேலும் மாணவர்கள் செல் போன்கள் பயன்படுத்துவது மற்றும் இருசக்கர வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் மாணவர்களின் குடும்பத்தை பாதிக்கும். இவை அனைத்தையும் தவிர்த்து நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், நல்ல மரியாதை இவையனைத்திலும் சிறப்பாக இருந்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும். மேலும், பெண் குழந்தைகள் பாலியல் தொல்லை மற்றும் தொடுதலின் அவசியம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்
அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் நகராட்சியில் உள்ள சி.எஸ்.ஐ உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வர்ணம் தீட்டி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் பார்வையிட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்திய மாணவர்களுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் நகர மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எம்.கே.சி.சுபாஷினி மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

