வேதாரண்யம் ஒன்றிய அளவிலான கலை இலக்கிய விழா போட்டிகள்
வேதாரணியம் சி.க. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் நடைபெற்றன.
வேதாரண்யம் டிசம்பர் 2
வேதாரண்யம் ஒன்றிய அளவிலான கலை இலக்கிய விழா போட்டிகள் நவம்பர் 29 ல்
வேதாரணியம் சி.க .சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளியில் தொடங்கியது.
கலை விழாவினை வேதாரணியம் நகர் மன்ற தலைவர் மா.மீ. புகழேந்தி தொடங்கி வைத்தார் வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளிமற்றும்பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியஇரு இடங்களில் நடந்து வருகின்றது.
இக்கலை விழாவில் நுண்கலை 11,இசை 3. கருவி இசை தோற்கருவி 10, துளை காற்று கருவி 15, தந்திக் கருவிகள் ஆறு, இசை சங்கமம் நான்கு ,நடனம் 16, நாடகம் எட்டு ஆக மொத்தம் 73 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த விழாவில் அரசு நடுநிலைப் பள்ளிகள் 22 உயர்நிலைப் பள்ளிகள் 12 மேல்நிலைப் பள்ளிகள் 17 இவற்றைச் சேர்ந்த மாணவ மாணவிகள் ஆயிரம் எண்ணிக்கை அளவில் பங்கேற்றனர்.




போட்டிகள் வேதாரண்யம் சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். அன்பழகன் மருதூர் வடக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வேதாரண்யம்,வட்டார கல்வி அலுவலர் ராஜமாணிக்கம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
போட்டியின் அமைப்பாளர்களாக பன்னாள் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மா.மோகனசுந்தரம்,மருதூர் வடக்கு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வீ பொது வுடைச் செல்வன்,சிறு தலைக்காடு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ் செல்வராஜ் ,பிராந்தியங்கரை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஏ. பார்த்திபன் ,கைலவனம் பேட்டை தலைமையாசிரியை கி. மரகதம் ,பூசாரிக்காடு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இர.குருபரன், மூலக்கரை நடுநிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ந.ஆனந்தராசு, செட்டித்தெரு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை க.மேகலை ஆகியோர் அமைப்பாளர்களாக இருந்து போட்டியை நடத்தித்தினர் நேற்று நடைபெற்ற போட்டிகளை நாகப்பட்டினம் மாவட்ட கல்வி அலுவலர் பி.செல்வராஜ், மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் G.கார்த்திகேயன் ,பள்ளித் துணை ஆய்வாளர் சூரியமூர்த்தி ஆகியோர் பார்வையிட்டு பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
இன்று வெள்ளிக்கிழமை மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இன்று நடைபெற்ற நிகழ்ச்சிகளில் வேதாரணியம் வட்டாட்சியர் ஜெயசீலன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளை பாராட்டினார். மேலும் இன்றுடன் ஒன்றிய அளவிலான போட்டிகள் நிறைவடைந்தன. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

