நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் 11 பயனாளிகளுக்கு 01 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.
நாகப்பட்டினம் டிசம்பர் 2
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கடன் உதவி வழங்கும் விழாவில் அரசு சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பாரத ஸ்டேட் வங்கி மூலமாக 11 பயனாளிகளுக்கு 1 கோடியே 7 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவிக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.
மத்திய மாநில அரசு சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் முத்ரா திட்டம் மற்றும் பெண்களுக்கான ஸ்டாண்ட் அப் இந்தியா ஆகிய திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கி கடன்களை பாரத ஸ்டேட் வங்கி மூலமாக இன்று 11 பயனாளிகளுக்கு ஒரு கோடியே 7 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஸ்ரீ கோவிந்த நாராயண கோயல், பாரத ஸ்டேட் வங்கியின் மண்டல மேலாளர் ஏ. பிரபாகர் ,நாகை வங்கியின் முதன்மை மேலாளர் எஸ். காதர் பாஷா. மேலாளர் என். வித்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

