நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ்,இன்று பார்வையிட்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 30
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று பார்வையிட்டார்
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் உரிமைப்பாதுகாப்பு குறித்த சிறப்பு விழிப்புணர்வு முகாம் வாகனத்தினையும் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.

அதனைத் தொடர்ந்து நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசங்கள் அடங்கிய பதாகையை கையில் ஏந்தியபடி விழிப்புணர்வு ஏற்படுத்தியதையும், கோலப்போட்டிகள் நடத்தப்பட்டதையும் மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் பார்வையிட்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சத்யகலா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

