தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் துணைமேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, ஆகியோர் முன்னிலையில் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்தில் மாநகராட்சி மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், ஜெபஸ்டின் சுதா, கந்தசாமி, ராஜதுரை, பட்சிராஜ், விஜயகுமார், சரண்யா, சோமசுந்தரி, வைதேகி, மரியகீதா, நாகேஸ்வரி, கண்ணன், பொன்னப்பன், சரவணக்குமார், ராமகிருஷ்ணன், முத்துவேல், பவாணி மார்ஷல், ரெக்ஸின் சூசை, மெட்டில்டா, காந்திமணி, ராஜேந்திரன், காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, கம்யூனிஸ்ட் கவுன்சிலர் முத்துமாரி, அதிமுக எதிர்கட்சி கொறடா மந்திரமூர்த்தி, மதிமுக கவுன்சிலர் ராமுத்தம்மாள், உள்ளிட்ட கவுன்சிலர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளான சாலை கால்வாய், குடிதண்ணீர், தீர்வை, ஆக்கிரமிப்பு, பூங்கா பாராமரித்தல், மழைநீர் அகற்றுதல், அம்மா உணவகம், சீரான உணவு பாராமரிப்பு, உள்ளிட்ட ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ள குறைகளை சூட்டிகாட்டி தேவையானவற்றை எடுத்துக் கூறி பலர் கோரிக்கை மனுவாக கொடுத்தனர். திமுக கவுன்சிலர்கள் பலர் தங்களது பகுதிகளில் உள்ள புதிய பணிகளை மேற்கொண்டு செய்து கொடுத்த மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, ஆணையர் சாருஸ்ரீ, உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில் 60 வார்டு பகுதிகளில் உள்ள குறைகளை முழுவதுமாக தீர்க்கப்படும் நிதி நிலைமைக்குஏற்ப உடனடியாக செய்ய வேண்டிய பணிகள் என கணக்கீடப்பட்டு புதிய சாலைகள் பல பகுதிகளில் அமைக்கப்பட்டு வருகின்றன. பிரதான தேசிய நெடுஞ்சாலை பணிகள் நடைபெறவுள்ளன. ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் உள்ள குறைகளை நீங்கள் சுட்டி காட்டும் போது அதில் எதற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதை ஆராய்ந்து பணிகள் செய்து கொடுக்கப்படும் பின்னர் படிப்படியாக அனைத்து குறைகளும் தீர்த்து வைக்கப்படும் மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் பல ஆக்கிரமிப்புகள் இருக்கின்றன. அதில் சில மீட்கப்பட்டுள்ளன. சில இடங்களில் பலர் சிபாரிசு நமக்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பதில் கண்டறியப்பட்டு வழக்கம் போல் மக்களுக்கான பணிகள் நடைபெறுகின்றன. எல்லாவற்றையும் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் பாதிப்புகள் அதிகமாக இருக்கும் பொதுமக்களின் நலன் கருதியே சில இடங்களில் தேவையற்றவைகளை அகற்றி பணிகள் நடைபெறுகின்றன. ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு வந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரிய அளவில்மழை இல்லை இருந்தாலும் விரைவாக முடித்துக் கொடுக்க வேண்டியதது நமது கடமை.
சுட்டி காட்டும் குறைகளை குறிப்பெடுத்துக் கொண்டு அதிகாரிகள் துணையுடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்று பல்வேறு வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதே போல் சிலருடைய கேள்விக்கு ஆணையர் சாருஸ்ரீ உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளித்தனர். டூவிபுரம் மேற்கு என்று இருந்த பகுதியை அண்ணாநகர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உள்பட 10 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அன்னலட்சுமி, கலைச்செல்வி, செயற்பொறியாளர் அசோகன், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ்;, திட்டம் ரெங்கநாதன், உதவி ஆணையர்கள் காந்திமதி, சேகர்,
கவுன்சிலர்கள் ஜாக்குலின்ஜெயா, தனலட்சுமி, தெய்வேந்திரன், சுயம்பு, ரெங்கசாமி, மும்தாஜ், ஜான், ஜாண்;சிராணி, அதிர்ஷ்டமணி, கற்பககனி, ஜெயசீலி, ரிக்டா, பேபி ஏஞ்சலின், சுப்புலட்சுமி, மகேஸ்வரி, விஜயலட்சுமி, அதிமுக கவுன்சிலர்கள் வீரபாகு, விஜயலட்சுமி, வெற்றிச்செல்வன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையர் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வழக்கமான கூட்டத்தை விட கேள்வி பதில்களில் இன்று சற்று காரமாகவும் சுவாராஸ்யமாகவும் இருந்தன. அனைத்து கேள்விகளுக்கும் முறையான பதில்களை மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.

