தூத்துக்குடி,நவ,27
உதயநிதி ஸ்டாலின் 45 வது பிறந்தநாள் முன்னிட்டு தூத்துக்குடி
கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் மாப்பிள்ளையூரணியில்
தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 45வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீன்வளம் மற்றும் கால்நடை துறை அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும் மாப்பிள்ளையூரண ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.எம். ஸ்டாலின் தலைமையில் மாப்பிள்ளையூரணியில் சுமார் 130 தூய்மை காவலர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விதமாக சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான சரவணகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை காவலர்களுக்கு சேலைகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ஆம்ஸ்ட்ராங், சதீஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் பிரபாகர், இளைஞர் அணி ரமேஷ், குணா, பாலானந்த், குமார், சக்திபாலன், கௌதம், தூய்மை காவலர்கள் 100 க்கு மேற்பட்டவர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாப்பிள்ளயூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் உட்பட திமுக நிர்வாகிகள் அனைவரையும்
தூத்துக்குடி கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளரும் மாப்பிள்ளையூரண ஊராட்சி மன்ற உறுப்பினருமான ஏ.எம். ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். ஆண்டுதோறும் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை கொண்டாடும் இவர் இந்த ஆண்டும் மிகச் சிறப்பாக தூய்மை காவலர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கி சிறப்பித்தார்.
செய்தி தொகுப்பு
எம்.கண்ணன்.
போலீஸ் செய்தி நியூஸ்

