நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் நவம்பர் 26 நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு சார்பில் நடைபெற்ற வேலை வாய்ப்புடன் கூடிய இளைஞர் திறன் திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார். கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் உடன் உள்ளார்.
பின்னர் மாவட்ட ஆட்சி தலைவர் தெரிவித்ததாவது,
இளைஞர் திறன் திருவிழாவானது மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டு, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் முலம் செயல்படுத்தப்பட்டு வரும் தீன் தயாள் உபாத்யாய கிராமின் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் இளைஞர் திறன் திருவிழா தமிழக அரசால் நடத்தப்படுகிறது. இதன் நோக்கம் இளைஞர்கள் மத்தியில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்கள் தகுதி மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப தகுதியான வேலைவாய்ப்பு அல்லது சுய தொழில் செய்வதற்கு வழிவகை ஏற்படுத்தி தருவதாகும்.




அதனடிப்படையில் இளைஞர் திறன் திருவிழா நம் மாவட்டத்தில் முதல் கட்டமாக நாகப்பட்டினம் வட்டாரத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அவற்றில் கலந்து கொண்ட 535 இளைஞர்களில் 279 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திடவும், இரண்டாம் கட்டமாக கீழ்வேளூர் வட்டாரத்தில் நடத்தப்பட்டதில் கலந்து கொண்ட 520 இளைஞர்களின் 213 இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்திடவும் 11 பயிற்சி நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து மூன்றாம் கட்டமாக தலைஞாயிறு பேரூராட்சி மண்டபத்தில் நடைபெற்று வருகிறது. இதில் 14 பயிற்சி நிறுவனங்கள் வருகை தந்து பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. பயிற்சியை முடித்து வேலைக்கு செல்வோர்கள் தங்களுக்கு மிகக்குறைந்த ஊதியம் வழங்கப்படுகிறது என எண்ணாமல் கொடுக்கப்பட்ட பணியினை சிறப்பாக பார்த்தால் மேலும் நம் வாழ்வில் முன்னேற்றம் அடையலாம்.
நமது மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் வரை 2600 இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் 1820 நபர்களும், திட்டத்தின் மூலம் 7822 நபர்களுக்கு தொழில் பயிற்சி வழங்கப்பட்டு, அவர்களில் 5662 நபர்களும் வேலைவாய்ப்பினை பெற்று பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும், இந்நிகழ்ச்சியில் தீனதயாள் உபாத்யாய கிராமின் யோஜனா திட்டத்தில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களையும், திறன் மேம்பாட்டு பயிற்சி கழகத்தின் சார்பில் இணையத்தள பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சிதலைவர் வழங்கினார்.
முன்னதாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள இஜிஎஸ் பிள்ளை செவிலியர் கல்லூரியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் அனைத்து நிலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்து, நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட தம்பிதுரை பூங்கா நாகூர் தர்கா அருகில் உள்ள குளத்தினை புனரமைக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் ஆய்வு மேற்கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜி.தமிழரசி, தலைஞாயிறு பேரூராட்சி தலைவர் செந்தமிழ்செல்வி பிச்சையன், உதவி திட்ட அலுவலர்கள் இரா. முருகேசன், பா.பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்
மச்சோடா.

