சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்ட மன்ற உறுப்பினரும், திமுக மாநில இளைஞரணி தலைவருமான உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் 12வது வார்டு சார்பாக ஸ்டேட் பாங்க் காலனி உள்ள அங்கன்வாடியில் பயிலும் குழந்தைகளுகாக சேர் , கரும் பலகை, குக்கர், பாய் மற்றும் உபயோக பொருட்கள் வழங்கப்பட்டது.
12 வது வட்ட செயலாளர் சந்தன மாரி முத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் s. அருண் சுந்தர் கலந்து கொண்டார்.
மேலும் மாமன்ற உறுப்பினர் s.தெய்வேந்திரன் ,வார்டு துணை செயலாளர் s. சிவாகுமார் ,வட்ட பிரதிநிதி M. சேர்மத்துரை, அவை தலைவர் C. ராஜன் கழக முன்னோடி T. ரமேஷ், இளைஞர் அணியை சேர்ந்த கார்த்தி விக்கி அரவிந்த் சுந்தர் கௌதம் முணீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

