• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

policeseithitv by policeseithitv
November 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

நாகப்பட்டினம் நவம்பர் 25

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

பிரதம மந்திரியின் விவசாயி கௌரவ நிதி திட்டம் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான கௌரவ நிதித்திட்டத்தின் கீழ் விவசாய குடும்பத்திற்கு மூன்று தவணையாக தலா ரூ.2000 வீதம் ஆண்டிற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. அடுத்தடுத்த தவணைத் தொகையை தொடர்ந்து பெறுவதற்கு ஆதார் எண்ணுடன் கைபேசி எண் மற்றும் வங்கி கணக்கு எண்ணை இணைத்து கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கு கடைசி நாளாக 30.11.2022 அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பதிவு மேற்கொண்டவர்களுக்கே 13ஆவது தவணைத் தொகை விடுவிக்கப்படும். எனவே இத்திட்டத்தில் தொடர்ந்து பயன்பெற விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதிக்கு அருகாமையில் உள்ள பொது இ-சேவை மையம் அல்லது தபால் நிலையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் இதுவரை நாகப்பட்டினம் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும், திருமருகல் வட்டாரத்தில் 11 கிராம ஊராட்சிகளிலும், கீழ்வேளுர் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும், கீழையூர் வட்டாரத்தில் 7 கிராம ஊராட்சிகளிலும், தலைஞாயிறு வட்டாரத்தில் 6 கிராம ஊராட்சிகளிலும், வேதாரண்யம் வட்டாரத்தில் 10 கிராம ஊராட்சிகளிலும் ஆக மொத்தம் 51 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் வேளாண்மை – உழவர் நலத்துறை மூலம் பண்ணை கருவிகளான கடப்பாறை (1 எண்), இரும்பு சட்டி (1 எண்), களைக்கொத்தி (1 எண்), மண்வெட்டி (1 எண்) மற்றும் கதிர்அருவாள் (1 எண்) ஆகியன ரூ.3000 மதிப்பில் ஒரு தொகுப்பாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகளுக்கு 90 சத மானியமும், இதர விவசாயிகளுக்கு 75 சத மானியமும் அனுமதிக்கப்படும்.

இத்திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கிராமங்களில் தானியங்களை சேமித்து பாதுகாப்பு செய்யும் பொருட்டு ரூ.4,956 மதிப்பில் 8ழூ6 மீட்டர் அளவிலான தார்ப்பாய் 50 சத மானியமாக ரூ.2,100 என்கிற விகிதத்தில் விநியோகம் செய்யப்படும். மேலும் இத்திட்டத்தின் கீழ் பயிர்களுக்குத் தேவையான உரம், தென்னைக் கன்றுகள், பயறுவிதைகள் மற்றும் பல இடுபொருட்கள் மானிய விலையிலும், விலையில்லாமலும் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இத்திட்டத்தில் வேளாண்மை – உழவர் நலத்துறையையும் சேர்த்து 17 துறைகள் இதில் இணைந்து செயல்படுத்தும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்களில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் இத்திட்டத்தின் கீழ் 2022-23ஆம் ஆண்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடிக்கு போக மீதமுள்ள நிலங்களில் வனப்பரப்பினை அதிகரிக்கும் வகையில் வேளாண் காடுகள் உருவாக்கிட 100 சத மானியத்தில் வேம்பு, தேக்கு, செம்மரம், மகாகனி, ஈட்டி மரம், வேங்கை மற்றும் மலை வேம்பு ஆகிய மரக்கன்றுகள் வனத்துறை நாற்றுப்பண்ணை மூலமாக இலவசமாக வழங்கப்படும். அதிகபட்சமாக ஒரு நபருக்கு ஒரு எக்டேருக்கு 400 மரக்கன்றுகள் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் “உழவன் செயலி“ மூலமாக முன்பதிவு செய்து (அல்லது) வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து பயன்பெறலாம். வழங்கப்படும் மரக்கன்றுகளில் உயிருடன் இருக்கும் மரக்கன்றுகளுக்கு மட்டும் அடுத்த 3 ஆண்டுகளுக்கு ஒரு கன்றுக்கு ரூ.7 வீதம் பராமரிப்பு மானியம் வழங்கப்படும். 2022-23ஆம் ஆண்டிற்கு இத்திட்டத்தில் 467 விவசாயிகள் 69,662 மரக்கன்றுகள் கேட்டு பதிவு செய்துள்ளனர். இதில் 11 விவசாயிக்கு 4300 கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த பண்ணைய திட்டம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடப்பு 2022-23ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த பண்ணைய திட்டத்தின் கீழ் 200 ஹெக்டேர் இலக்காக பெறப்பட்டுள்ளது. இதில் நாகப்பட்டினம் வட்டாரத்திற்கு 32 ஹெக்டேர், திருமருகல் வட்டாரத்திற்கு 34 ஹெக்டேர், கீழ்வேளுர் வட்டாரத்திற்கு 32 ஹெக்டேர், கீழையூர் வட்டாரத்திற்கு 34, தலைஞாயிறு வட்டாரத்திற்கு 34, வேதாரண்யம் வட்டாரத்திற்கு 34 ஹெக்டேர் என பிரித்து அளித்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 1 மாடு, 10 ஆடுகள், 10 கோழிகள், 2 தேனிப்பெட்டிகள் மற்றும் பயிர் சாகுபடிக்கான இடுபொருட்கள் என அனைத்திற்கும் பின்னேற்பு மானியமாக ரூ.50,000 வழங்கப்படுகிறது. உழவன் கைபேசி செயலி இச்செயலி மூலம் வேளாண்மை – உழவர் நலத்துறை மானியத் திட்டங்கள், பயனாளிகள் முன்பதிவு, பயிர் காப்பீடு விபரம், உரம் மற்றும் விதை இருப்பு விவரம், வேளாண் இயந்திரங்கள் வாடகை மையங்கள் விவரம், விளை பொருட்கள் சந்தை விலை நிலவரம், வானிலை முன்னறிவிப்பு பற்றிய செய்திகள், தங்கள் பகுதி வேளாண் உதவி அலுவலர்கள் வருகை விவரம், ஆகிய தகவல்கள் உடனுக்குடன் அறிந்து கொண்டு பயன்பெற முடியும். இதுவரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் 22,687 விவசாயிகள் இச்செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்கள். அனைத்து விவசாயிகளும் உழவன் கைபேசி செயலியினை உடன் கூகுள் பதிவிறக்க செயலி மூலமாக தங்கள் கைபேசியில் பதிவிறக்கம் செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, வேளாண்மை இணை இயக்குநர் ஜா.அக்கண்டராவ், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் க.பா.அருளரசன்தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் (பொ) ராஜாராம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வெங்கடேசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார். விவசாயிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

நாகப்பட்டினம் ????மாவட்டத்தில் உள்ள இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தின நிகழ்ச்சியில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்

Next Post

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் மற்றும் வங்கிகளின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் 132 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளையும், உயர்கல்வி பயிலும் 68 மாணவ மாணவிகளுக்கு ரூ. 2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார். 

Next Post
நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் மற்றும் வங்கிகளின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் 132 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளையும், உயர்கல்வி பயிலும் 68 மாணவ மாணவிகளுக்கு ரூ. 2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார். 

நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் மற்றும் வங்கிகளின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் 132 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளையும், உயர்கல்வி பயிலும் 68 மாணவ மாணவிகளுக்கு ரூ. 2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார். 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In