நாகப்பட்டினம் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் மற்றும் வங்கிகளின் ஆலோசனைக் குழு கூட்டத்தில் 132 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளையும், உயர்கல்வி பயிலும் 68 மாணவ மாணவிகளுக்கு ரூ. 2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.
நாகப்பட்டினம் நவம்பர் 25 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற வாடிக்கையாளர் தொடர்பு முகாம் மற்றும் வங்கிகளின் ஆலோசனைக் குழு கூட்டத்தில்; 132 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளையும், உயர்கல்வி பயிலும் 68 மாணவ மாணவிகளுக்கு ரூ. 2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடன்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் உடன் உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாவது
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும் பல்வேறு நல்ல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க நிறைய திட்டங்களை கொண்டு வருகிறார்கள். அவற்றில் உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகள் எவ்வித இடையூறும் இல்லாமல் கல்வியினை தொடர வேண்டும் என்ற நோக்கத்துடன் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேசிய வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் பங்கு பெறும் கல்வி கடன் மேளா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து இங்கு கடன் மேளா நடைபெறுகிறது. உரிய ஆவணங்களை மாணவ, மாணவிகள் தயார் செய்த பின் பொதுவான கல்வி கடன் விண்ணப்ப படிவம் மூலம் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பத்தின் மென்நகல் சம்பந்தப்பட்ட வங்கிக்கு இணையம் வாயிலாக சென்றடையும். மாணவர்கள் தங்கள் அளிக்கும் விண்ணப்பத்தினை சரிபார்த்தப்பின் தகுதியுடைய அனைவருக்கும் கல்வி கடன் வழங்கப்படும்.


மேலும், சுய உதவி குழுக்களுக்கு, தனிநபர்களுக்கு தொழில் செய்வதற்க்கு கடன், மாவட்ட தொழில் மையம், தட்கோ மூலம் தொழில் செய்ய வரும் நபர்களுக்கு கடன், நபார்டு வங்கி மூலம் விவசாயம், மீன்வளம்; கடன் போன்ற பல்வேறு கடன் திட்டங்களை வங்கிகளால் செயல்படுத்தபட்டு வருகின்றது.
மேலும் தொழில் முனைவோர்களை கண்டறிந்து வங்கிகள் கடன் கொடுத்து மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் வங்கிகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும் வகையில் வாடிக்கையாளர்கள் செயல்பட வேண்டும் எனவும், வங்கிகள் மூலம் பெறப்பட்ட கடன்களை உரிய கால தவணைக்குள் செலுத்தி நன்மதிப்பை பெற்று மீண்டும் அதிகப்படியான கடன் பெறும் வகையில் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்த கடனுதவி வழங்கும் முகாமில் மகளிர் சுய உதவி குழு கடன் வீட்டுக் கடன், விவசாய கடன், தட்கோ கடன், மாவட்ட தொழில் மையம் மூலமான கடன் போன்ற பல்வேறு கடனுதவிகளை 132 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 44 இலட்சம் மதிப்பீட்டில் பல்வேறு கடனுதவிகளையும், உயர்கல்வி பயிலும் 68 மாணவ மாணவிகளுக்கு ரூ. 2 கோடியே 70 இலட்சம் மதிப்பீட்டில் கல்விக் கடன்களையும் முன்னதாக தட்கோ மூலம் 6 பயனாளிகளுக்கு டிராக்டர், டாடா ஏசிஇ போன்ற நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் .என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் வழங்கினர்.
தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் .என்.கௌதமன் தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்ட மன்ற உறுப்பினர் ஜெ.முகமது ஷா நவாஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி எடுத்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மண்டல மேலாளர் கோ.ஸ்ரீராம் இந்தியன் வங்கி மண்டல மேலாளர் எ.குமார், உதவி பொது மேலாளர் ரிசர்வ் வங்கி வெங்கடேசன் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் க.செந்தில்குமார், அனைத்து தேசிய வங்கி மற்றும் தனியார் வங்கி மேலாளர்கள், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

