• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி கிப்சன்புரம் எம்ஜிஆர் சிலையில் புதிதாக எழுதப்பட்ட பெயர் பலகையை அழித்தவர்களுக்கு மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் கடும் கண்டனம்.*

policeseithitv by policeseithitv
November 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

*தூத்துக்குடி வ.உ.சி. சாலை தொடர்ச்சியில் உள்ளது கிப்சன்புரம். அங்குள்ள பூங்காவின் முன்பு சுமார் 20 ஆண்டுகளாக எம்ஜிஆர் ரசிகர்களால் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் மார்பளவு திருவுருவச் சிலை ஒன்று அமைக்கப்பட்டது.* *அதை இன்றளவும் சிலை அமைத்த அதிமுக நிர்வாகிகள் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த சிலையின் அடிப்பக்கம் உள்ள பெயர் பலகையில் தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும் அதிமுக 39 வது வட்ட கழக செயலாளரும் அப்பகுதியைச் சேர்ந்தவருமான பி.திருச்சிற்றம்பலம் கட்சி நிர்வாகிகளின் பெயர்களை எழுதினார். அவர் எழுதிய பிறகு அதனை புதிதாக நியமிக்கப்பட்ட ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகியின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு சிலர் அதனை அழித்துள்ளனர். இதனை கேள்விப்பட்ட மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் திருச்சிற்றம்பலம் எம்ஜிஆரின் பெயர் பலகையை அழித்தவர்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.*

*அப்போது அவர் கூறியதாவது. தூத்துக்குடி மாநகரத்தில் அதிமுக நிர்வாகியாக இருந்து வருகிறேன். நான் பிறந்து வளர்ந்த இப்பகுதியில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் சிலை உள்ளது. அதனை 20 ஆண்டுகளுக்கு முன்னர் எம்ஜிஆர் ரசிகர் மன்றத்தைச் சார்ந்த மூத்த அதிமுக நிர்வாகி சாமுவேல் அவர்களும் அப்பதியைச் சேர்ந்த முன்னாள் மாமன்ற உறுப்பினர் செல்லப்பா என்பவரும் மற்றும் அன்றைய தினம் அப்பகுதியில் கட்சி நிர்வாகிகளாக பணியாற்றியவர்களும் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவச் சிலையை நிறுவினர். அதற்கு நிதி உதவி செய்தவர் மூத்த அ.தி.மு.க உறுப்பினர் சாமுவேல் சார் அவர்கள்.*

*அந்த சிலை இன்றளவும் அவர்களால் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதில் நான் பெயர் பலகையில் நிர்வாகிகளின் பெயரை இன்று 24.11.2022 எழுதினேன்.* *அதனை கேள்விப்பட்ட ஓபிஎஸ் அணியை சேர்ந்த நிர்வாகி எஸ்.ஏசாதுரை என்பவர் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்த பெயர் பலகையை அவரது ஆதரவாளர்களைக் கொண்டு அழித்து உள்ளார். அதிமுகவை சார்ந்த நிர்வாகிகளான எங்கள் பெயரை எழுதியதை அழிக்க ஓபிஎஸ் அணியினருக்கு என்ன தகுதி உள்ளது. மேலும் கிப்சன்புரத்தை பற்றிய அவர்கள் அறிந்திராத ஒரு தகவலை நான் ஓபிஎஸ் அணியினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். கிப்சன்புரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ள பூங்கா எங்கள் குடும்ப முன்னோர்களின் பூர்வீக நிலம். அதனை அந்த காலத்தில் எங்களது முன்னோர் ஐயா நல்லபெருமாள் பிள்ளை அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அரசிற்கு வழங்கினார்கள் என்பதை இந்த நேரத்தில் நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன். அந்த இடத்தின் முகப்பில் தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்களின் திருஉருவச் சிலை நிறுவப்பட்டுள்ளது என்பதையும் இந்த சிலையை பராமரிக்க முழு அதிகாரமும் உண்மையான அதிமுக நிர்வாகிகளான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி மாண்புமிகு அம்மா ஆகியோரின் அரசியல் வாரிசாக திகழும் மாண்புமிகு கழக இடைக்கால பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களின் வழியில் செயல்படும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட கழகத்தின் அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் அன்றைய தினம் மேற்படி புரட்சித்தலைவரின் சிலையை திறந்து வைத்த அண்ணாச்சி எஸ்‌.பி.சண்முகநாதன் அவர்கள் மற்றும் தூத்துக்குடியில் பொறுப்பில் உள்ள எங்களுக்கும் மேலும் இந்த சிலையை நிறுவிய சாமுவேல் சார் உள்ளிட்ட கழக மூத்த நிர்வாகிகளுக்கும் உள்ளதே தவிர அரசியல் சுயலாபத்திற்காக கட்சியை பிளவு படுத்த நினைக்கும் ஓபிஎஸ் போன்ற அவர் வழியில் இருக்கின்ற நிர்வாகிகள் யாருக்கும் இல்லை என்பதை இந்த நேரத்தில் கூறிக்கொண்டு பெயர் பலகையை அளித்ததை வன்மையாக கண்டிக்கின்றேன். இவ்வாறு அதிமுக நிர்வாகி திருச்சிற்றம்பலம் கூறினார்.*

Previous Post

தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட சிறப்பு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது!

Next Post

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மற்றும் மாவட்ட குடும்ப நல துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

Next Post
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மற்றும் மாவட்ட குடும்ப நல துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் -மக்கள் நல்வாழ்வுத்துறை, மற்றும் மாவட்ட குடும்ப நல துறை சார்பில் நடைபெற்ற ஆண்களுக்கான நவீன வாசக்டமி விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In