வேதாரண்யத்தை அடுத்த பஞ்ச நதி குளம் மேற்கு வேம்பதேவன் காட்டை சேர்ந்த சேகர் என்பவரை மடையான் பறவைகளை பிடித்தற்காக பிடித்து அபராதம் விதிக்கப்பட்டது.
வேதாரணியம் நவம்பர் 23
திருச்சி வன மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் வனவர்கள், ராமதாஸ், செல்வி மகாலெட்சுமி, வனக்காப்பாளர்கள் ரணீஷ்குமார், செல்வி இலக்கியா, வேட்டை தடுப்பு காவலர் நிர்மல்ராஜ் ஆகியோர்கள் அடங்கிய சிறப்பு குழுவினர்கள் இன்று பஞ்சநதிகுளம் மேற்கு வேம்பதேவன்காடு வயல் வெலியில் வலை வைத்து மடையான் பறவை பிடித்த பக்கிரி மகன் சேகர் 53 | 22
என்ற நபரினை பிடித்து விசாரணை செய்து இந்திய வனஉயிரினப் பாதுகாப்பு சட்டம் 1972ன் படி வழக்குபதிவு செய்யப்பட்டு வனஉயிரினக் காப்பாளர் நாகப்பட்டினம் யோகேஷ்குமார் மீனா, அவர்களின் உத்தரவின்படி இணக்க கட்டண மாக 15000/= வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் அவர்களால் விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

