நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 22
நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட கோட்டைவாசல் நகர் புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது
கீழ்வேளுர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிறப்பு அம்சமாக பிரசவம் பார்த்துக்கொள்ளும் தாய்மார்களுக்கு ரூ.2000 ரொக்கமாகவும் அல்லது ரூ.2000 மதிப்பிலான வெள்ளி டம்ளர் வழங்கப்படும் என்ற அறிவிப்பு தாய்மார்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும் இந்நிலையத்தினை சுத்தமாக பராமரித்து, சிறந்த முறையில் சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


மேலும் தமிழ்நாட்டில் நம் மாவட்டத்தில் மட்டும்தான் வம்சம் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 24*7 தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் 94423 74310 என்ற அலைபேசி எண்ணின் மூலமும், 04365-250310 என்ற தொலைபேசி எண்ணின் மூலமும் அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தொடர்பு கொள்ளலாம்.
பிரசவத்தின் போதும் பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம். கருக்கலைப்பு மற்றும் அது தொடர்பான அனைத்து செய்திகளையும் மருத்துவரின் ஆலோசனைகள் பெயரில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் பெற்றுக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் குடும்ப நலத் துறையின் சார்பாக குடும்ப கட்டுப்பாடு குறித்த முறைகளையும் இந்த தொலைபேசி எண்ணின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். நம் மாவட்டத்தில் உள்ள உயர் பிறப்பு வரிசை தாய்மார்களை நிரந்தர குடும்ப நல முறைக்கு உட்படுத்துவதற்காக தாய் காக்கும் திட்டம் 15.12.2021 முதல் துவங்கப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. திட்டத்தின் மூலம் பயனடையும் தாய்மார்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.600 உதவித்தொகையுடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதியாக ரூ.1400 கூடுதலாக சேர்த்து ரூ.2000 வழங்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் மரு. ஜோஸ்பின் அமுதா , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்துகொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

