நாகப்பட்டினம் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் நவம்பர் 21 நாகப்பட்டினம் ஊராட்சி பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் பாப்பாகோவில் கிராமத்தில் உள்ள சர் ஐசக் நியூட்டன் கல்லூரியில் நான் முதல்வன் திட்டம் குறித்து நடைபெற்ற பயிற்ச்சி வகுப்பினையும், திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் புதிதாக வீடுகள் கட்டும் கட்டுமான பணிகள் நடைபெறுவதையும், வேளாண்மை-உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் பனை விதைகள் நடும் விழாவில் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு மரக்கன்றுகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து திருமருகல் ஊராட்சி ஒன்றியம் பனங்குடி ஊராட்சி சமத்துவபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.34 இலட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டி நிறுத்தம் மற்றும் கழிப்பறை கட்டும் பணிகள் நடைபெறுவதையும், இல்லம் தேடிக் கல்வி திட்டத்தில் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணி நடைபெறுவதையும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி, ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

