நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் நவம்பர் 21
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 234 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

