தூத்துக்குடி,
நவ, 20
தூத்துக்குடி மாவட்டம், மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் இல்லம் தோறும் இளைஞர் அணி உறுப்பினர் சேர்த்தல் நிகழ்ச்சி மற்றும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக
மாநில இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை 3.30 மணி அளவில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவிருக்கிறார்கள் தூத்துக்குடி விமானநிலையத்தை வந்தடையும் இவருக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்டம், மற்றும் வடக்கு மாவட்டம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது

அதன்பின் மறவன்மடம் சத்யா ரிசார்ட்டில் சிறுதுநேரம் ஒய்வெடுத்தப்பின் இன்று மாலை 5 மணி அளவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பகுதியான புதுக்கோட்டையில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்
இதற்கான ஏற்பாட்டை தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம் மிக பிரம்மாண்டமான முறையில் வரவேற்பு கொடுக்கும் வகையில் சத்யா ரிசார்ட்ஸ் மற்றும் மறவன்மடம், புதுக்கோட்டை ஆகிய பகுதியில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்கும் வகையில் கொடிக்கம்பங்கள் பேனர்கள் என அசத்தல் ஏற்பாடுகள் செய்துள்ளார்.
புதுக்கோட்டையில் இளைஞரணி உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து
கொண்டு உறுப்பினர் சேர்க்கை துவக்கி வைக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க இளைஞர் அணியினரை பெருந்திரளாக ஒருங்கிணைத்து அசத்தல் ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம் தெற்கு மாவட்ட செயலாளரும் மீன்வளத்துறை அமைச்சருமான அமைச்சர் அனிதா ஆர் ராதாகிருஷ்ணன் ஆலோசனையின் பெயரில் சிறப்பாக செய்து இருக்கிறார். புதுக்கோட்டையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற உதயநிதி அதனைத் தொடர்ந்து இன்று இரவு சத்யா ரிசார்டில் தங்கி விடுகிறார். நாளை திங்கள் கிழமை காலை கொங்கராயன் குறிச்சியில் நடைபெறும் புதிய திரைப்பட தொடக்கவிழாவில் கலந்து கொள்கிறார். அதன்பின் திருவைகுண்டம் அணைக்கட்டில் மீன்குஞ்சுகள் விடும் நிகழ்வு நடைபெறுகிறது. அதன்பின் கன்னியாகுமரிக்கு சாலைமார்க்கமாக செல்கிறார்.. ஆகவே 20 மற்றும் 21 தேதி ஞாயிறு மற்றும் திங்கள் இரண்டு நாள்களும் தூத்துக்குடி கன்னியாகுமாரி மாவட்டங்களுக்கு வருகை தரும் மாநில செயலாளருடன் இருக்கும் பொருட்டு மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக்கழக இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் அனைவரும் பெரும் திரளாக கலந்துகொண்டு நிகழ்வுகளை சிறப்பித்துத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன். என்று பல்வேறு முன்னேற்பாடு பணிகளை
பை மூ ராமஜெயம்
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்
தூத்துக்குடி தெற்கு மாவட்டம் அவர்கள் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தித் தொகுப்பு:
எம்.ஆத்தி முத்து
போலீஸ் செய்தி நியூஸ்

