நாகப்பட்டினம் மாவட்டம்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்று வரும் (தொகுதி- I) தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் நவம்பர் 19
நாகப்பட்டினம் மாவட்டம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்று வரும் (தொகுதி- I) தேர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரி, வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இ.ஜி.எஸ் பிள்ளை கல்லூரி ஆகிய கல்லூரிகளில் நடைபெற்று வரும் தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.

இன்றைய தேர்வில் 3 மையங்களில் மொத்தம் 2118 நபர்கள் விண்ணப்பித்திருந்தார்கள். இவற்றில் 1261 நபர்ன் தேர்வில் கலந்து கொண்டனர். 857 நபர்கள் தேர்வில் கலந்துக்கொள்ளவில்லை.
இந்நிகழ்வில் மவாட்ட வருவாய் அலுவலர் .வி.ஷகிலா, நாகப்பட்டினம் வட்டாட்சியர் ராஜசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

