நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அரசு சிறப்புச் செயலாளர் த. ஆபிரகாம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
நாகப்பட்டினம் நம்பர் 19
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கான ஆய்வு கூட்டம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அரசு சிறப்புச் செயலாளர் த. ஆபிரகாம் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் பார்வையாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அரசு சிறப்புச் செயலாளர் தெரிவித்ததாவது
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த 09.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் 01.01.2023-ஐ தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய இளம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை இந்திய தேர்தல் ஆணையத்தால் சிறப்பு முகாம்கள் நடத்தி 05.01.2023 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதால் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தமிழக அரசு என்னை வாக்காளர் பட்டியல் பார்வையாளராக நியமித்துள்ளது.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 651 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. மொத்தம் 5,51,319 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,69,247 ஆண்களும், 2,82,050 பெண்களும், இதர வகுப்பினர் 22 பேர்களும் உள்ளனர்.

நாகப்பட்டினத்தில் உள்ள முன்று சட்டமன்ற தொகுதிகளில் முறையே கீழ்க்கண்டவாறு வாக்காளர்கள் உள்ளனர்.
1
163. நாகப்பட்டினம்
91,673
97,510
20
1,89,203
2
164. கீழ்வேளுர்
84,900
88,671
2
1,73,573
3
165.வேதாரண்யம்
92,674
95,869
0
1,88,543
மொத்தம்
2,69,247
2,82,050
22
5,51,319
மேலும், 01.01.2023-ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ல் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்திட 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வருகின்ற 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய நாட்களில் விண்ணப்பம் செய்தோ அல்லது இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமோ விண்ணப்பிக்கலாம். பொது மக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு வாக்காளர் பட்டியல் பார்வையாளராக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, அரசு சிறப்புச் செயலாளர் அவர்கள் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா,நாகப்பட்டினம் உதவி ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் மை.ஜெயராஜ பௌலின், நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதாரண்யம், மற்றும் திருக்குவளை வட்டாட்சியர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

