• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.

policeseithitv by policeseithitv
November 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கலந்து கொண்டு 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

 

நாகப்பட்டினம் நவம்பர் 18

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கலந்து கொண்டு 132 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சி தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழக தலைவர் என்.கௌதமன், தமிழ்நாடு தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன், கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவானது ஆண்டுதோறும் நவம்பர்-14ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு ஏழு நாட்கள் வரை நடத்தபடும். குறிப்பாக இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழகத்தில் தான் கூட்டுறவு வங்கி தொடங்கப்பட்டது.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு அரசு செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வழிவகை செய்து வருகிறார்கள். நாகப்படடினம் மாவட்டத்தில் 58 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களும், 9 கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளும்,13 பணியாளர் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கங்களும், 2 நகர கூட்டுறவு கடன் சங்கங்களும், 1 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கம், 1 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்சி வங்கி, 1 உப்பு உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மற்றும் இதர மீனவர் கூட்டுறவு கடன் சங்கங்கள், பால்வள கூட்டுறவு சங்கங்கள், சமூக மேம்பாட்டு கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அனைத்து நிதி வசதிகளான பயிர் கடன்கள், நகை கடன்கள், கூட்டுப் பொறுப்புக் குழு கடன்கள், சுய உதவி குழு கடன்கள், வீட்டு வசதி கலன்கள் ஆகியவற்றை வழங்கி வருகின்றன.


நம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாக கடந்த 2021-2022ஆம் நிதியாண்டில் ரூ.150 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதுவரை 27,016 விவசாயிகளுக்கு ரூ.139 கோடியே 69 இலட்சம் பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.
பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் தனிநபர் வருமானத்தினை பெருக்கும் நோக்கிலும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக பெண்களுக்கு மகளிர் சுய உதவிக்குழு கடன் வழங்கப்பட்டுவருகிறது. நடப்பு ஆண்டில் 4,850 எண்ணிக்கையிலான உறுப்பினர்களுக்கு சுமார் ரூ. 9 கோடியே 44 லட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதுபோல் 45 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு 19 இலட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
கணவனை இழந்த கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோர் தங்கள் சொந்த காலிலேயே வாழ்க்கை நடத்துவதற்கு ஏதுவாக அவர்களுக்கு 5 வட்டியில் கடன் கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டு நடப்பாண்டில் இதுவரை நம் மாவட்டத்தில் 71 நபர்களுக்கு ரூ.9 இலட்சத்து 65 ஆயிரம் கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்பு கடன் கூட்டுறவுத் துறையில் முதல் முறையாக ஆடு மாடு, கோழி மற்றும் மீன் வளர்க்க விவசாயிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைபாண்டில் நாளது தேதி வரை 2,313 விவசாயிகளுக்கு ரூ.5 கோடியே 86 இலட்சம் கடன் வழங்கப்பட்டுள்ளது. நகை கடன் நடப்பாண்டில் கூட்டுறவு நிறுவனங்கள் மூலமாக நாளது தேதி வரை 43,539 நபர்களுக்கு ரூ.206 கோடியே 78 இலட்சம் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.மேலும் நம் மாவட்டத்தில் கூட்டுறவு நிறுவனங்களின் மூலம் ஆறு மருந்தகங்கள் இயங்கி வருகின்றன. இந்த மருந்தகங்களின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு 20 வரை தள்ளுபடியில் மருந்து,மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் இதுவரை ரூ.33 இலட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் மருந்துகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு பல்வகை மின்னணு சேவைகளை வழங்கிடும் வகையில் 58 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பொது சேவை மையங்கள் தொடங்கப்பட்டு நில உடமை பதிவிறக்கம், சமூக நலத்துறை சான்றுகள், மின்னணு பயண சீட்டு, மின்சார கட்டணம் செலுத்துதல் போன்ற பல சேவைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இச்செவைகள் மூலம் இச்சங்கங்கள் நடப்பு ஆண்டில் 45,638 சேவைகளுக்கு ரூ.25 இலட்சத்தை 27 ஆயிரம் மற்றும் 44,645 சேவைகளுக்கு 19 இலட்சத்து 27 ஆயிரம் வருவாய் ஈட்டியுள்ளன.நம் மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலம் 287 முழு நேரக்கடைகளும் 57 பகுதி நேரக்கடைகளும், மகளிர் மற்றும் மீனவர் கூட்டுறவு சங்கங்கள் வழியாக 22 நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 2,18,318 குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு விலையில்லா அரிசி 3,558 மெ.டன், ஜீனி-231 மெ.டன், கோதுமை-120 மெ.டன், துவரம் பருப்பு-161 மெ.டன், பாமாயில் 190 மெ.லிட்டர் அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இம் மாவட்டத்தில் கடந்த ஓராண்டுகளில் இதுவரை 6 முழுநேர கடைகளும், 5 புதிய பகுதி நேர நியாய விலை கடைகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. 75 கடைகளின் தோற்றம் நவீன மயமாக்கப்பட்டு வண்ண ஓவியங்களும் வரையப்பட்டு வருகின்றன. நம் மாவட்ட கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் 344 நியாய விலை கடைகளுக்கு தர சான்றிதழும், உரிமம் பெறப்பட்டு வருகின்றன. இதுவரை 302 நியாய விலை கடைகள் தர சான்றிதழும், 338 நியாய விலை கடைகள் உரிமம் பெறப்பட்டுள்ளன.

அதனைதொடர்ந்து, சுய உதவிக்குழு கடன், பயிர்க்கடன் என மொத்தம் 132பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 4 இலட்சம் மதிப்பிலான கடனுதவிகளும், சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களும், பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, நாகப்பட்டினம் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் க.பா.அருளரசு, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் வெ.பெரியசாமி, தஞ்சாவூர் கூட்டுறவு விற்பனை இணையத்தின் இணைப்பதிவாளர், மேலாண்மை இயக்குநர் ப.உமா மகேஸ்வரி, நாகப்பட்டினம் ஒன்றியக்குழு தலைவர் வே.அனுசியா, நகர மன்றத் தலைவர் இரா.மாரிமுத்து, நகர மன்றத் துணை தலைவர் செந்தில்குமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வீ.சரபோஜி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

Previous Post

வ. உ.சி நினைவு தினத்தையொட்டி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் தலைவர் சி எஸ் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை

Next Post

வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் 

Next Post
வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் 

வேதாரண்யத்தை அடுத்த தியாகராஜபுரம் செட்டிப்புலம் வயல்வெளிகளில் கொக்கு மடையான் பறவைகளை வளை வைத்து பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம் 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In