நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் மற்றும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 17 நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் மற்றும் கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் ம.பிரதிவிராஜ் உடன் உள்ளார திருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சி தட்டாரத்தெருவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.41 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளையும், மேல போலகம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகளையும்;, கீழ போலகம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.66 இலட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டி நிறுத்தம் கட்டும் பணிகளையும், அம்பல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.68 இலட்சம் மதிப்பீட்டில் நெற்களம் அமைக்கும் பணிகளையும், அம்பல் சத்திரக்குளத்தில் ரூ.4.68 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மற்றும் படிக்கட்டுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதையும், புத்தகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகளையும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பில்லாளி ஊராட்சியில் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டிலும், மற்றும் கீழ பூதனூர் ஊராட்சியில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டிலும் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டும் பணிகளையும்;, நரிமணம் ஊராட்சியில் 14 வது மான்ய நிதியின் கீழ் ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடக் கட்டும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



அதனை தொடர்ந்து கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஆனைமங்கலம் ஊராட்சியில் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்டும் பணிகளையும்;, எரவாஞ்சேரி ஊராட்சியில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டும் பணிகளையும்;, வெங்கிடங்கால் மற்றும் பட்டமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.14.59 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை அங்காடி கட்டடம் கட்டும் பணிகளையும்மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வில் திருமருகல், கீழ்வேளுர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

