நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசினர் வட்ட தலைமை மருத்துவமனையில் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 17
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள அரசினர் வட்ட தலைமை மருத்துவமனையில் உள்ள கண் சிகிச்சைப்பிரிவு , சித்தா பிரிவு, பொது மருத்துவ பிரிவு, இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை பரிசோதனை மையம், மகப்பேறு மையத்தினையும், நவீன சமையல் கூடத்தினையும் மற்றும் வம்சம் திட்டம் செயல்படுவது குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
தமிழ்நாட்டில் நம் மாவட்டத்தில் மட்டும்தான் வம்சம் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் 24*7 தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் 94423 74310 என்ற அலைபேசி எண்ணின் மூலமும், 04365-250310 என்ற தொலைபேசி எண்ணின் மூலமும் அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தொடர்பு கொள்ளலாம்.
பிரசவத்தின் போதும் பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம். கருக்கலைப்பு மற்றும் அது தொடர்பான அனைத்து செய்திகளையும் மருத்துவரின் ஆலோசனைகள் பெயரில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் பெற்றுக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் குடும்ப நலத் துறையின் சார்பாக குடும்ப கட்டுப்பாடு குறித்த முறைகளையும் இந்த தொலைபேசி எண்ணின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
மேலும் நம் மாவட்டத்தில் உள்ள உயர் பிறப்பு வரிசை தாய்மார்களை நிரந்தர குடும்ப நல முறைக்கு உட்படுத்துவதற்காக தாய் காக்கும் திட்டம் 15.12.2021 முதல் துவங்கப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. திருக்குவளை வட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் பயனடையும் தாய்மார்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.600 உதவித்தொகையுடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதியாக ரூ.1400 கூடுதலாக சேர்த்து ரூ.2000 வழங்கப்படுகிறது. என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து திருக்குவளை அரசு மருத்துவமனையில் மகப்பேறு செய்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும், பரிசு பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.


கீழ்வேளுர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெண்மணி ஊராட்சியில் உள்ள நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், அருகில் உள்ள நூலகத்திலும் ஆய்வு செய்தார். வடகாலத்துர் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.71 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சமத்துவமயானத்தினையும் பார்வையிட்டு, வடகாலத்துர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கழிப்பறை வசதிகளையும், புதிய நெல் களம் அமைக்கப்பட்டதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார், தொடர்ந்து அக்கரை வீதி தெருவில் 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக வீட்டிற்கே சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஏற்படுத்தினார்
இந்த ஆய்வின்போது இணை இயக்குநர் மருத்துவப்பணிகள் மரு. ஜோஸ்பின் அமுதா , செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் திருக்குவளை வட்டாட்சியர் ராஜ்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் கலந்துகொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

