தூத்துக்குடி. நவ. 17.
தூத்துக்குடி எம்பி கனிமொழி, தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் மீனவர் நலன் மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன்; வழிகாட்டுதல் படி, தூத்துக்குடி ஒன்றிய பெருந்தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் தூத்துக்குடி ஒன்றிய குழு நிதியிலிருந்து புதிய பயணிகள் நிழல் கூடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.

நிகழ்ச்சி ஒன்றிய கவுன்சிலர்கள். அந்தோணி தனுஷ்பாலன், முத்து மாலை, தொம்மை சேவியர், ஆனந்தி, வார்டு உறுப்பினர் சேசு, மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் பிலோமின் ராஜ், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சியான் செல்வம், கிளைச் செயலாளர்கள் நெல்சன் , முருகன், வேல்முருகராஜ், ராமர், ஜான்சன், கிராஸ், ஒன்றிய மாணவர் அணி அருண் கார்த்திக் கழக நிர்வாகிகள், ஜெயராஜ், குரூஸ், அழகு சேகர், மற்றும் பெரியவர்கள்அப்பன் ராஜ், கொம்பையா, வேல்ராஜ் சமூக ஆர்வலர் தொம்மை அந்தோணி, ஒன்றிய இளைஞர் அணி துணை சுதர்சன், மகாலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

