வேதாரண்யம் வட்டம் கோடியக்கரையில் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மீனவர்கள் அவர்களது படகு கொண்டு கோடியக்கரை கிராமத்தில் தங்கி மீன்பிடி தொழில் செய்வதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த அமைதி பேச்சுவார்த்தை கூட்டம்.
வேதாரணியம் நவம்பர் 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் வட்டம் கோடியக்கரையில் வெளியூர் மற்றும் வெளி மாவட்ட மீனவர்கள் அவர்களது படகுகள் கொண்டு கோடியக்கரை கிராமத்தில் தங்கி மீன் பிடி தொழில் ஈடுபடுவது தொடர்பாக உள்ளூர் மீன்பிடி தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப் போவதாக வேதாரணியம் வட்ட உள்ளூர் மீனவர்கள் அறிவித்த கோரிக்கை மனுவின் அடிப்படையில் மீனவர்களின் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணும் பொருட்டு இன்று காலை வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வேதாரண்யம் வருவாய் கோட்ட அலுவலர் ஜெயராஜ் பவுலின் தலைமையிலும்
நாகப்பட்டினம் மீன்வள இணை இயக்குனர் மற்றும் உதவி இயக்குனர் முன்னிலையிலும் அமைதிப் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேதாரணியம் வருவாய் வட்டாட்சியர், வேதாரணியம் காவல் துணை கண்காணிப்பாளர் (சட்டம் மட்டும் ஒழுங்கு) ,
வேதாரணியம் காவல் துணை கண்காணிப்பாளர் (கடலோர காவல் குழுமம்) ,
வேதாரணியம் காவல் ஆய்வாளர் (கடலோர காவல் குழுமம்), வேதாரணியம் காவல் ஆய்வாளர், வேதாரணியம் ஆய்வாளர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, வேதாரணியம் சரக வருவாய் ஆய்வாளர், கோடியக்கரை கிராம நிர்வாக அலுவலர் மற்றும் அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள் வேதாரண்யம் வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட வேதாரணியம் வட்ட மீனவ பிரதிநிதிகள்
கோடியக்கரை கிராமத்தில் வெளி மாவட்ட மீனவர்கள் தங்கி மீன் பிடிப்பதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.
இந்தப் பிரச்சினை குறித்து ஏற்கனவே நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடந்த (04.11.2020)
அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் கீழ்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இந்தக் கூட்டத்தில் இறுதியாக கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

கோடியக்கரையில் தங்கி மீன் பிடி தொழில் செய்ய நாகப்பட்டினம் மாவட்ட மீனவர்களை தவிர்த்து மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து 150 படகுகள் இந்த ஆண்டு (எதிர்வரும் மார்க் 2023 வரை)
மட்டுமே அனுமதிக்கலாம். எதிர்வரும் வருடங்களில் வெளி மாவட்ட மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன் பிடி தொழில் செய்வது குறித்து நீதிமன்றத்தினை அணுகி அதன்மூலம் உரிய பரிகாரத்தை தேடிக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. அனுமதிக்கப்படும் படகுகள் மீன்வளத் துறையின் பதிவு சான்று மற்றும் தங்குதள அனுமதி பெற்று இருத்தல் வேண்டும் .படகுகள் மீன்பிடி உரிமைச் சீட்டு பெற்ற பின்னரே கடலுக்கு மீன் பிடிக்க அனுமதிக்கப்படும்.கோடியக்கரையில் அரசால் அனுமதிக்கப்பட்ட அனைத்து வலைகளையும் கொண்டு மீன் பிடிக்க அனுமதிக்கலாம். மீன்பிடி படகுகள் அரசால் தெரிவிக்கப்பட்டவாறு முறையாக வண்ணம் தீட்டப்பட வேண்டும். சரியான அளவுகளில் படகுகளின் பதிவின் தெளிவாக எழுதப்பட வேண்டும். மற்றும் மீன்வள துறையின் மூலம் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுரைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் எனவும் மற்றும் வெளிமாவட்ட மீனவர்கள் கோடியக்கரையில் தங்கி மீன் பிடிப்பதை மீன்வளத்துறை முறை படித்திட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
மேற்படி முடிவுகளின் அடிப்படையில் எதிர்வரும் 16.11.2022 அன்று வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடக்கப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்த சாலை மறியல் போராட்டத்தினை கைவிடுவதாகபோராட்ட தரப்பினர் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

