தேசிய பத்திரிகை தினத்தையொட்டி தூத்துக்குடி பத்திரிகை துறையினருக்கு கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி. நவ. 16,
சாமானிய மக்களை உலகத்துடன் இணைப்பதில் பத்திரிகைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நம் நாட்டுக்கு உள்ளே, வெளியே நடக்கும் விஷயங்களை அறிய வைக்கும் நம்பகரமான தோழனாக அவை விளங்குகின்றன. நம் நாட்டில் சுதந்திரப் போராட்டத்தை வேகப்படுத்துவதற்கு அக்கால பத்திரிகைகள் துணை நின்றன.
ஒரு ஜனநாயக நாடு இயங்குவதற்கு 4 தூண்கள் அவசியம். அவற்றில் பத்திரிகைத்துறையும் ஒன்று. நம் நாட்டில் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்கவும், பத்திரிகைகளின் தரத்தை ஒழுங்குபடுத்துவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா செயல்படுகிறது.
பிரஸ் கவுன்சில் துவக்கப்பட்ட நவம்பர் 16ம் தேதி, தேசிய பத்திரிகை தினமாக ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதி, மத நல்லிணக்கம், அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்துப் போராடும் பெரும் பொறுப்பு பத்திரிகைகளுக்கு உண்டு.
உலகம் முழுவதும் ஒவ்வொரு 45 நாட்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடும் போது, நம் நாட்டில் பத்திரிகைகள் ஓரளவிற்கு சிந்தனை சுதந்திரத்துடன் செயல்படுகின்றன என்பது சற்று ஆறுதல் தரும் செய்தியாகும்.
இந்நிலையில் தூத்துக்குடியில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்களுக்கு திமுக துணை பொதுச்செயலாளரும் மாநில மகளிரணி செயலாளரும் நாடாளுமன்ற திமுக துணைத் தலைவருமான கனிமொழி எம்.பி, வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், அன்னலெட்சுமி கோட்டுராஜா ஆகியோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
தூத்துக்குடி பிரஸ் கிளப் தலைவர் காதர்முகைதீன், துணைத் தலைவர் லட்சுமணன், முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், மூத்த பத்திரிகையாளர்கள் அன்பழகன், குமாரவேல், ஜாய்சன், ஆனந்த ராஜ், மற்றும் முத்துராமன், மோகன்ராஜ், ரவி, நடராஜன், மெர்வின், கருப்பசாமி, ஜெயக்குமார், சதீஸ்குமார், ஜெகஜீவன், பெலிக்ஸ், ராமசாமி, அண்ணாதுரை, பேச்சிமுத்து, செந்தில்குமார், சுதர்சன், அல்போன்ஸ் உட்பட பத்திரிகையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

