வேதாரண்யத்தை அடுத்த தென்னடா வயல்வெளியில் தன் வீட்டிற்கு அருகில் மடையான் கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்சித்த வரை பிடித்து அபராதம்
வேதாரணியம் நவம்பர் 12
திருச்சி மண்டல தலைமை வனப்பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, இவர்களின் உத்தரவின்படி வேதாரண்யம் வனச்சரக அலுவலர் பா.அயூப் கான் தலைமையில் ராமதாஸ் வனவர், வனக்காப்பாளர்கள் ரணிஷ்குமார், இலக்கியா, வேட்டை தடுப்பு காவர்கள் பாண்டியன், நிர்மல்ராஜ் ஆகியோர்கள் கொண்ட வேட்டை தடுப்பு சிறப்பு குழுவினர்களுடன் இன்று காலை தென்ன டார் கிழக்கு வயல்வெளிகளை தணிக்கை செய்கையில் தென்னடார் கிழக்கை சேர்ந்த ராமன் (வயது 38) த/பெ பஞ்சநாதன் ஆகிய நபர் தன் வீட்டிற்க்கு அருகில் இருந்த வயல்வெளியில் மடையான், கொக்கு பறவைகளை கண்ணி ஊன்றி பிடிக்க முயற்ச்சிக்கும் போது வனச்சரக அலுவலர் பா. அயூப் கான் தலைமையிலான வன குழுவினர் மேற்கண்ட நபரை பிடித்து விசாரனண செய்து, கைது செய்து இந்திய வன உயிரி பாதுகாப்பு சட்டபடி வழக்குபதிவு செய்து நாகப்பட்டினம் வனஉயிரினக் காப்பாளர் யோகேஷ்குமார் மீனா, உத்தரவின்படி இணக்க கட்டணமாக 25000/= ரூ அபராதம் விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

