*வேதாரண்யம் அருகே மருதூர் தெற்கு பஞ்சநதிக்குளம் கிழக்கில் செயல்படும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கேஸ் சிலிண்டர் வெல்டிங் மிஷின் பயன்படுத்தி கொள்ளை முயற்சி வாய்மேடு காவல்துறையின் விசாரணை
வேதாரணியம் நவம்பர் 12
நாகப்பட்டினம் மாவட்டம்
வேதாரண்யம் அருகே உள்ள பஞ்சநதிக்குளம் கிழக்கில் மருதூர் தெற்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் வாடிக்கையாளர்கள் சுமார் 7.5 கோடி மதிப்புள்ள நகைகள் 1700பேர் அடகுவைத்து உள்ளனர் வங்கியில் 14 லட்சம் ரொக்கம் இருப்பு உள்ளது .இந்த நிலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் ஜன்னல் கம்பி வெல்டிங் வைத்து உடைத்து.



உள்ளே புகுந்து பூட்டுகளை உடைத்து உள்ளனர். மேலும் லாக்கரை உடைக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது வங்கியின் காவலாளி வந்து உள்ளார் .இதை பார்த்த கொள்ளையர்கள் வங்கி காவலாளியை தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்.
இதனால் வங்கியில் இருந்த நகைகளும் 14லட்சம் ரொக்கமும் தப்பியது.வங்கி தலைவர் கூறும்போது எதுவும் கொள்ளைபோகவில்லை எனவும் நகைகள், பணம் பாதுகாப்பாக உள்ளது எனவும் தெரிவித்தார்.அதனால் கொள்ளை முயற்சி பற்றி தகவல் அறிந்து கூடிய பொதுமக்கள் கலைந்து சென்றனர். கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் கேஸ் சிலிண்டரை விட்டு சென்று உள்ளனர் . வாய்மேடு போலிசார் காவல் ஆய்வாளர் கன்னிகா தலைமையில் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த கொள்ளை முயற்சி சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

