நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 11
நாகப்பட்டினம் நகராட்சி மற்றும் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் உள்ள புனித செபஸ்தியார் கோவில் தெருவில் மழையால் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணிகள் நடைபெறுவதையும், நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட சிந்தாதுறை மாதா கோவில் தெரு புதுப்பள்ளி சாலை பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. இந்திய வானிலை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் பெறப்பட்டு அதன்படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



நாகப்பட்டினம் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்துத்துறை அலுவலர்களையும் உள்ளடக்கிய வட்ட அளவிலான 3 குழுக்கள் அதாவது முன்னெச்சரிக்கை மற்றும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு, தங்குமிடம் மற்றும் பராமரிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 11 நபர்கள் வீதம் 1 வட்டத்தில் 33 நபர்கள் அடங்கிய 3 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறாக, நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதிலும் 132 நபர்கள் அடங்கிய 12 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வெள்ளம் மற்றும் புயல் ஏற்படும்பொழுது பாதிக்கக்கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைத்திட தயார் நிலையில் உள்ளார்கள்.
நம் மாவட்டத்தில் 5 பல்நோக்கு பேரிடர் பாதுகாப்பு மையம், 12 புயல் பாதுகாப்பு மையங்கள், 100 சமுதாயக்கூடம் 73 திருமண மண்டபங்கள், 145 பள்ளிகள், 22 கல்லூரிகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 29 முன்னெச்சரிக்கை அறிவிப்பு மையங்கள் செயல்பாட்டில் உள்ளது.
மாவட்ட நிர்வாகத்திடம் 182 ஆயில் என்ஜின், 1 புல்டோசர், 110 ஜே.சி.பி., 254 பவர்ஷா, 28 பவர் பம்ப், 292 ஜெனரேட்டர், 5 ஜென்செட், 76 குப்பை அள்ளும் இயந்திரம், 21153 சாக்கு பைகள், 149 லைப் ஜாக்கெட், 150 லைப்பாய், 5 இரப்பர் படகு மற்றும் இதர தேவையான உபகரணங்கள் கையிருப்பில் தயார் நிலையில் உள்ளது. வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் பொருட்டு தேவையான உபரகணங்களை பெறுவதற்கு ஏதுவாக உரிமையாளர்களின் விவரப்பட்டியல் தயார் நிலையில் உள்ளது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய அவசரக்கால 24 7 கட்டுப்பாட்டு அறை மையத்தில் 04365-1077 கட்டணமில்லா தொலைபேசி எண் இயங்கிவருகிறது. இந்த தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பொதுமக்கள் இயற்கை இடர்பாடு மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம் தொடர்பான புகார்களை தெரியப்படுத்தலாம். மேலும், அவசரகால மையத்தில் தரைவழி தொலைபேசி 04365-251992 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். மேலும், 8438669800 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் குறுஞ்செய்தியும் அனுப்பலாம், இப்புகார்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், வடகிழக்கு பருவ மழை காரணமாக எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாத வகையில் துறைவாரியாக முன்னெச்சரிக்கையுடன் செயல்பட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இவ்ஆய்வின்போது, நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி, வேளாங்கண்ணி பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமி, வட்டாட்சியர் ந.இராஜசேகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

