• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம் நடந்தது.

policeseithitv by policeseithitv
February 26, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்  நடந்தது.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா தேரோட்டம் இன்று கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழா கடந்த 17-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒன்பது நாளும் கோவிலில் விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. 10-ம் திருநாளான இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி அளவில் தேரோட்டம் நடந்தது.
வழக்கமாக மாசித்திருவிழா தேரோட்டத்தின்போது பெரிய தேரில் சுவாமி குமரவிடங்க பெருமான்-வள்ளி, தெய்வானையுடனும், பெரிய தேரைவிட சற்று சிறிய தேரில் தெய்வானை அம்பாளும், சிறிய தேரில் விநாயகரும் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வருவார்கள். இந்த ஆண்டு கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக, 2 பெரிய தேர்களையும் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் சுவாமி குமரவிடங்க பெருமான், தெய்வானை அம்பாள் ஆகியோர் 3 சிறிய தேர்களில் எழுந்தருளி, ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
11-ம் திருநாளான நாளை (சனிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மேலக்கோவிலில் இருந்து சுவாமி- அம்பாள் எழுந்தருளி சன்னதி தெருவில் உள்ள யாதவர் மண்டபத்திற்கு செல்கிறார்கள். அங்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனைக்கு பின்னர் சுவாமி, அம்பாள் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி வெளிவீதி வழியாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டபம் சேர்கிறார்கள். அங்கு இரவில் அபிஷேகம், அலங்காரமாகி, சுவாமி- அம்பாளுடன் தெப்பத்தில் 11 முறை சுற்றும் தெப்ப உற்சவம் நடக்கிறது.
Previous Post

போதையில் ஏற்பட்ட தகராறில் வாலிபர் குத்திக்கொலை: தூத்துக்குடியில் பயங்கரம்!!

Next Post

தூத்துக்குடி, புதியம்புத்துர் அருகே ஒருவர் கொலை – கொலையாளி உடனடி கைது – போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி.பாராட்டு

Next Post
தூத்துக்குடி, புதியம்புத்துர் அருகே ஒருவர் கொலை – கொலையாளி உடனடி கைது –  போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி.பாராட்டு

தூத்துக்குடி, புதியம்புத்துர் அருகே ஒருவர் கொலை - கொலையாளி உடனடி கைது - போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி.பாராட்டு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In