புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – எதிரியை உடனடியாக கைது செய்த புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் பாராட்டு.
தூத்துக்குடி மாவட்டம், புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புளியமரத்து அரசடி காலனியைச் சேர்ந்த செந்தூரான் மகன் சண்முகராஜ் (42) என்பவருக்கும் அதே பகுதியைச் சேரந்த ஏசையா மகன் இம்மானுவேல் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை புளியமரத்து அரசரடி கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு சண்முகராஜ் மற்றும் அவரது சகோரதரர் கடற்கரையாண்டி ஆகிய இருவரும் சென்று கொண்டிருந்த போது, அங்கு மதுபோதையில் வந்த இம்மானுவேல் கட்டையால் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த சண்முகவேல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.


இதுகுறித்து சண்முகராஜின் சகோதரர் கடற்கரையாண்டி அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து எதிரி இம்மானுவேல் என்பவரை கைது செய்தனர். மேலும் இவ்வழக்கில் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை உடனடியாக கைது செய்த புதியம்புத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் விமலா, புதியம்புத்தூர் உதவி ஆய்வாளர் பாலன், தலைமை காவலர் பச்சைபெருமாள், தனிப்பிரிவு தலைமை காவலர் அருள்முருகன், சிப்காட் காவல் நிலைய காவலர் முத்துராஜ் ஆகியோரை பாராட்டினார்.

