நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 9
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். கீழையூர் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் சோழவித்யாபுரம் ஊராட்சியில் உள்ள அன்னை நகர் சஞ்சய குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாருதல் மற்றும் கொள் மதகு அமைக்கும் பணிகளையும், ஊராட்சி மன்ற அலுவலகம் அருகில் ரூ.2.98 இலட்சம் மதிப்பீட்டில் மீன் மற்றும் காய்கறி விற்பனைக்கூடம் அமைக்கும் பணிகளையும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மற்றும் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.12.31 இலட்சம் மதிப்பீட்டில் அங்கன்வாடி கட்டடம் கட்டும் கட்டுமான பணிகளையும், நியாய விலைக்கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் தரம் குறித்தும், கருங்கண்ணி ஊராட்சியில் உள்ள பெருமாள் குளத்தில் 14 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.4.2 இலட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணி முடிவுற்றதையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் மழை நீர் வடிகால் அமைக்கும் பணி முடிவுற்றதையும், காரப்பிடாகை வடக்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.3.94 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



முன்னதாக, நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் உள்ள புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வி திறன் குறித்தும், வேளாங்கண்ணி பெரூராட்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தாய்க்காக்கும் திட்டம் குறித்த முகாமினை ஆய்வு செய்து கர்பிணி தாய்மார்களுக்கு தாய்க்காக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடினார். தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

