வேதாரணியம் நவம்பர் 9
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் சி. க.சு அரசு மேல்நிலைப்பள்ளியில் வரைவு வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர் பெயர் சேர்த்தல் பெயர் நீக்குதல் தொடர்பான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் , வேதாரணியம் வருவாய் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் ,தேர்தல் துணை வட்டாட்சியர் ராஜா ,வருவாய் ஆய்வாளர் மாதவன் , கிராம நிர்வாக அலுவலர் உத்ராபதி மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் நாகராஜன், அன்பழகன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

