நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்ட வரைவு வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வெளியிட்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 9
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2023 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாக கொண்டு வரைவு வாக்காளர் பட்டியல் இன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் அவர்களால் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். மேலும், வரைவு வாக்காளர் பட்டியல் வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று வெளியிடப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மொத்தம் 651 வாக்குச்சாவடி நிலையங்கள் உள்ளன. மொத்தம் 5,51,319 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,69,247 ஆண்களும், 2,82,050 பெண்களும், இதர வகுப்பினர் 22 நபர்களும் உள்ளனர்.
நாகப்பட்டினத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளில் முறையே கீழ்க்கண்டவாறு வாக்காளர்கள் உள்ளனர்.
வ.எண்
சட்டமன்ற தொகுதியின் பெயர்
ஆண்
பெண்
இதர
மொத்தம்
1
163. நாகப்பட்டினம்
91,673
97,510
20
1,89,203
2
164. கீழ்வேளுர்
84,900
88,671
2
1,73,573
3
165.வேதாரண்யம்
92,674
95,869
0
1,88,543
மொத்தம்
2,69,247
2,82,050
22
5,51,319
மேலும், 01.01.2023-ஐ தகுதி நாளாக கொண்டு சிறப்பு சுருக்க திருத்தம் 2023-ல் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்திட 18 வயது நிரம்பியவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்தல், நீக்கம், திருத்தம் முகவரி மாற்றம். வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான சிறப்பு முகாம் அந்தந்த
வாக்குச்சாவடி மையங்களில் வருகின்ற 12.11.2022, 13.11.2022, 26.11.2022 மற்றும் 27.11.2022 ஆகிய நாட்களில் விண்ணப்பம் செய்தோ அல்லது இணையதள முகவரியில் ஆன்லைன் மூலமோ விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ், தெரிவித்துள்ளார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் தேர்தல் வட்டாட்சியர் சாந்தி மற்றும் அரசு அலுவலர்கள்; கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

