தூத்துக்குடி.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நாணல் காடு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத திருக்கண்டேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 07.11.2022 அன்று மாலையில் ஐப்பசி அன்னாபிஷேகம் நடைபெற்றது.
தென்திருநள்ளாறு எனும் பெயர் பெற்ற திருநாணல்காடு ஸ்ரீசிவகாமி அம்மாள் சமேத திருக்கண்டேஸ்வரர் திருக்கோயில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. மேலும் பரிகார ஸ்தலமாகவும் இருப்பதால், நாள்தோறும் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை தந்து பரிகார பூஜைகள் செய்து வருகின்றனர்.
இக்கோவிலில் ஐப்பசி பௌணர்மியை முன்னிட்டு, அன்னாபிஷேகம், பௌணர்மி ஹோமம், மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்மாவட்டங்களில் இருந்து சிவபக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், செவ்வாய் தோஷம், அஷ்டமத்து சனி, சகல தோஷங்களையும் தர்ப்பப்புள் நிறைந்த காடாகவும் கஷ்டங்களையும் தீர்த்து வைக்கும் சிவஸ்தலமாக இக்கோவில் விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

