வேதாரணியத்தில் வேதாரணியேஸ்வர சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான இட ஆக்கிரமிப்பு
அகற்றம்.
வேதாரணியம் நவம்பர் 8
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் தெற்கு வீதியில் அருள்மிகு வேதாரண்யேஸ்வரர் சுவாமி திருக்கோவிலுக்கு சொந்தமான 18 சென்ட் மனைப் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்து குடியிருந்த குமாரசாமி என்பவரின் ஆக்கிரமிப்பு ஓட்டு கட்டிடம்
நாகப்பட்டினம் மாவட்டம் இணை ஆணையர் சட்டப்பிரிவு 79 B
ன் கீழான உத்தரவின் பெயரில் நாகப்பட்டினம் இந்து சமய அறநிலைத்துறை உதவி
ஆணையர்
ராணி ,தனி வட்டாட்சியர்
(ஆலய நிலங்கள்) அமுதா, அருள்மிகு வேதாரணியம் திருக்கோயில் செயல் அலுவலர் கவியரசன், சரக ஆய்வர் ராமதாஸ், சிறப்பு பணி செயல் அலுவலர்கள், வருவாய் துறையினர் மற்றும் காவல் துறையினர் மூலம் வீட்டிலிருந்த பொருள்கள் அனைத்தும் அகற்றப்பட்டு வீட்டை ஜே.சி.பி மூலம் அகற்றப்பட்டு கருங்கல் நடப்பட்டு இரும்பு வேலி அமைக்கப்பட்டது. இந்த இடத்தின் மொத்த மதிப்பு ரூபாய் ஒரு கோடி ஆகும். ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் இது அறநிலைத்துறைக்கு சொந்தமான இடமாகும் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. வீட்டை இடிக்கும் போது வீட்டின் உரிமையாளர் வாக்குவாதம் செய்ததால் வேதாரணியம் காவல் துறை ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.



இந்த ஆக்கிரமிப்பு நிலம் அகற்றப்பட்ட போது வேதாரண்யம் பகுதியில் பரபரப்பு நிலவியது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

