புதுக்கோட்டை, நவ,7
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் ஆணைப்படி இந்தி திணிப்பு எதிர்ப்பு விளக்க பொதுக்கூட்டம் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கடந்த 4 ம் தேதி மாலை புதுக்கோட்டை திலகர் திடலில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட நகர செயலாளர் ஆ.செந்தில் வரவேற்பு உரையாற்றினார். கூட்டத்திற்கு மாவட்ட கழக செயலாளர்
கே கே செல்ல பாண்டியன் தலைமை தாங்கினார்.
இதில் சிறப்புரையாற்றியதமிழக சுற்றுச்சூழல் காலநிலை மற்றும் அடி வேணுமா இளைஞர் நல விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ வீ மெய்ய நாதன் அவர்கள் ஆற்றிய உரையாவது: இந்தி திணிப்பு என்பது ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவானது குடியரசு தலைவர் அவர்களுக்கு அனுப்பி உள்ள பரிந்துரைகள் இந்தியாவின் பன்முகத் தன்மைக்கு வேட்டு வைப்பதாக அமைந்துள்ளது நாடாளுமன்ற முதல் பள்ளிகள் வரையில் அனைத்தையும் இந்தி மயமாக்குவது அவர்களின் திட்டமாகவே அது அமைந்துள்ளது இந்திய ஆட்சி மொழி அரசு மொழி பொதுமொழி என ஆக்குவதற்கு திட்டத்தின் தொடக்கமாக இது அமைந்துள்ளது இதனை நமது தமிழ்நாட்டில் ஒருபோதும் ஏற்க முடியாது என்ற குறிக்கோளுடன் நமது மாண்புமிகு முதல்வர் அவர்கள் முன்மொழிந்துள்ளார் இந்த இந்தி திணிப்பை எதிர்த்து நமது மாண்புமிகு முன்னாள் கழகத் தலைவர் கலைஞர் அவர்களும் எதிர்த்து வந்தார் இதற்காக சில தியாகிகளும் நமது கழக முன்னோடிகளும் இந்தி திணிப்பை எதிர்த்து சிறை வரை சென்றுள்ளார்கள் எனவே ஒரு போதும் தமிழகத்தில் இந்தி திணிப்பு இருக்காது என்று அதற்காக திமுக அரசு மிக பாடுபடும் என்றும் உறுதி அளித்தார். நிகழ்வில் ஏராளமான அனைத்து ஒன்றிய ஊராட்சி மற்றும் நகராட்சி கழக உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த மாபெரும் கூட்டத்திற்கு பாதுகாப்பு பணியில் புதுக்கோட்டை டவுன் காவல் நிலைய ஆய்வாளர் குருநாதன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் திமுகவினர் பொதுமக்கள் திமுக கூட்டணி கட்சிகள் என ஏராளமான பங்கேற்றனர்.

