தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள்:
கோவை மாநகராட்சி 80வது வார்டு மாமன்ற உறுப்பினர் முனைவர் மாரிசெல்வன் வழங்கினார்…
கோவை,நவ, 7
கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவை மாநகராட்சி 80வது வார்டு உட்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள், சீருடை, சோப்பு, போன்றவைகளை
பொது சுகாதாரக் குழு தலைவர் முனைவர் பெ. மாரிசெல்வன் தலைமையில் நடைபெற்றது.
குப்பைகள் தரம் பிரித்து பொதுமக்கள் வழங்க வீட்டுக்கு இரண்டு குப்பை டப்பாக்கள் நீலம் பச்சை என்கிற கலர்களில் வார்டில் உள்ள பொது மக்களின் வேண்டுகோளுக்கிணங்க 4500மேற்ப்பட்ட வீடுகளுக்கு இலவசமாக 80வது வார்டு மாமன்ற உறுப்பினரும் பொது சுகாதார குழு தலைவர் முனைவர் பெ. மாரிசெல்வன் அவர்கள் தன்னார்வலர் ஆதரவுடன் இலவசமாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது தூய்மை பணியாளர்களுக்கு சீருடை ,சோப்பு, போன்ற பாதுகாப்பு உபகரணங்களை
மாமன்ற உறுப்பினர் முனைவர் டாக்டர் மாரிச்செல்வன் வழங்கியது அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது
இதனால் கோவை மாநகராட்சியில் முன் மாதிரி வார்டாக 80 வது கொண்டு திகழ வேண்டும் என்று தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும்
மாரிச்செல்வன் உபகரணங்கள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். அதுபோல் பொதுமக்களும் தூய்மை பணியாளர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மாரிச்செல்வன் வார்டு மக்களிடம் தொடர்ந்து அறிவுறுத்தியுள்ளார் .
இந்த நிகழ்ச்சியின் போது மாநகராட்சி
நகர்நல அலுவலர்
மத்திய மண்டல உதவி ஆணையாளர் சுகாதார அலுவலர் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் வார்டு பொறுப்பாளர்கள் கழக நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 80 வது வார்டு மாமன்ற உறுப்பினரின் இந்த செயல் அனைவரும் மத்தியிலும் மிகுந்த பாராட்டை பெற்றுள்ளது.
செய்தி தொகுப்பு கோவை ரகுநாதன்

