நாகப்பட்டினம் மாவட்டம்
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நவம்பர் 6
நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் முட்டம் ஊராட்சியில் உள்ள திருவாசல் குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.62 இலட்சம் மதிப்பீட்டில் படித்துறை அமைக்கும் பணிகளையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், ஐவநல்லூர் ஊராட்சியில் 15 ஆவது மானிய நிதிக்குழு மற்றும் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சௌரியார் கோவிலில்; ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டிலும், செல்லூர் கிராமத்தில் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டிலும் புதிய அங்கன்வாடி மைய கட்டடம் கட்டுமான பணிகளையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.5.98 இலட்சம் மதிப்பீட்டில் கழிவு நீர் வாய்க்கால் அமைக்கும் பணி முடிவுற்றதையும், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.9.86 இலட்சம் மதிப்பீட்டில் குழாய் அமைக்கும் பணிகளையும், சிக்கல் ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.5.94 இலட்சம் மதிப்பீட்டில் மயான கொட்டகை சுற்றுச்சுவர் அமைக்கும் பணி முடிவுற்றதையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.30.00 இலட்சம் மதிப்பீட்டில் அரசு துணை சுகாதார நிலைய கட்டடம் கட்டுமான பணிகளையும் , மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டட கட்டுமான பணிகளையும், 15 ஆவது மானிய நிதிக்குழுவின் கீழ் ரூ.3.2 இலட்சம் மதிப்பீட்டில் மண்புழு உரம் தயாரிக்கும் கூடம் மற்றும் மக்கும்-மக்கா குப்பை பிரிக்கும் கூடம் அமைக்கும் பணிகளையும், தேமங்மலம் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3.00 இலட்சம் மதிப்பீட்டில் காத்திருப்பு கூடம் அமைக்கும் பணி முடிவுற்றதையும், மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.23.86 இலட்சம் மதிப்பீட்டில் ஆழியூர் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டும் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரேவதி , பாலமுருகன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

