உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் திருமூலர் ஆய்வு இருக்கையின் 6ம் ஆண்டு தொடக்கவிழா பேரறிஞர் அண்ணா கருத்தரங்குக் கூடத்தில் வைத்து 23.2.2021 அன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வள்ளலார் ஆய்வு இருக்கை பொறுப்பாளரும், திருமூலர் ஆய்வு இருக்கை உலகத் தமிழாராய்ச்சி நிறுவன தலைமை பொறுப்பாளருமான முனைவர் தி.மகாலட்சுமி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தமிழ் வளர்ச்சி இயக்ககம் இயக்குநரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநருமான முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் தலைமையுரையாற்றினார். சிறப்பு அழைப்பாளராக தெய்வத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் கலந்து கொண்டார்.

விஷ்ணு பிரத்தியங்கரா தாந்திரீகபீடம் முனைவர் பீடாதிபதி அண்ணாசாமி, தமிழ்மாநில சித்தவைத்திய சங்க தலைவரும், மருத்துவம் (ம) கலைகள் பழந்தமிழர் வாழ்வியல் இருக்கை மருத்துவர் எம்.பாஸ்கர், பழந்தமிழர் வாழ்வியல் இருக்கை பொறுப்பாளர் மருத்துவர் சி.ஜெயசந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
பட்டமளிப்பு சிறப்பு அழைப்பாளராக கோவை ஞானாலயா வள்ளலாhர் கோட்டம் இமயஜோதி திருஞானாந்தா சுவாமிகள் கலந்து கொண்டு, கல்வியாளர்கள், சமூக சேவகர்கள் பலருக்கு பட்டம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இப்பட்டமளிப்பு விழாவில் சமூக சேவகரும், தமிழ்நாடு சட்டப்பேரவை அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில தலைவரும், அமுதம் ரிப்போர்ட்டர் அமுதம் டிவி ஆசிரியர் டாக்டர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர்; டாக்டர் பட்டம் பெற்றனர்.
பின்னர், ஓம் உலகநாதன், க.நெல்லைவசந்தன், தி.சிவநேசன், தே.செல்வபூபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வள்ளலார் ஆய்வு இருக்கை பொறுப்பாளர் முனைவர் சுவாமி சுப்ரமணியம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.

