தூத்துக்குடியில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி அளித்த எஸ்.பி.,க்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறந்து வைக்க அனுமதி தரும்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமாரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மத்திய மாவட்டத்தின் சார்பாக மாவட்டத் தலைவர் சோலையப்ப ராஜா, மாவட்டச் செயலாளர் மகேஷ்வரன், மாவட்டப் பொருளாளர் ஆனந்த பொன்ராஜ், மாநில துனைத் தலைவர் வெற்றிவேல், செய்தித் தொடர்பாளர் எஸ்.செந்தில்முருகன் ஆகியோர் கோரிக்கை விடுத்தனர். வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரவு 11 மணி வரை கடைகளைத் திறக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் அனுமதி அளித்துள்ளார். இதையடுத்து எஸ்பிக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்டம் மற்றும் கிளைச் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.


