இன்று விளாத்திகுளம் உட்கோட்டத்தில் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் இரவு முழுவதும் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை வாகனத் தணிக்கை செய்ய உத்தரவிட்டு இருந்தார்கள்.
அதன்படி புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.வல்லபாய் பட்டேல், முதல் நிலை காவலர் பரமசிவன்(GrI.927) மற்றும் முதல் நிலை காவலர் ரவிக்குமார் (GrI.2460) ஆகியோர் வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும்போது அந்த வழியில் வந்த TN65 AX2407 மற்றும் TN65 AW1921 என்ற இரண்டு லாரிகளை சோதனை செய்ய நிறுத்தினார்கள். காவலர்களைக் கண்டதும் அந்த லாரியில் இருந்த ஓட்டுனர்கள் இறங்கி ஓடி விட்டனர். பின்னர் அந்த 2 லாரியையும் சோதனை செய்ததில் ஒவ்வொரு லாரிகளிலும் சுமார் இரண்டு யூனிட் மணல் திருட்டுத்தனமாக கொண்டு சென்றது தெரியவந்தது.

பின்னர் அந்த லாரிகளை புதூர் காவல் நிலையம் கொண்டு வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் இந்த இரண்டு லாரியும் ராமநாதபுரம் மாவட்டம் மூலக்கரைப்பட்டியை சேர்ந்த லட்சுமணன் மகன் திருமுருகன் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. மேலும் தப்பி ஓடிய 2 ஓட்டுனர்களையும் புதூர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர்.

