நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.வேதாரணியம் அக்டோபர் 29
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தாணிக்கோட்டகம் ஊராட்சி சேக்குட்டி தேவன் காடு கிராமத்தில் உள்ள வெட்டியான் குளத்தில் 15ஆவது மத்திய நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் ரூ.3.32 இலட்சம் மதிப்பீட்டில் படித்துறை கட்டும் பணிகள் நடைபெறுவதையும், வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.28.94 இலட்சம் மதிப்பீட்டில் புதிய நேரடி நெல் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டும் கட்டுமான பணிகளையும், பஞ்சநதிகுளம் கிழக்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.4.52 இலட்சம் மதிப்பீட்டில் உலர் கலம் அமைக்கும் பணிகளையும், தொடர்ந்து வண்ணான் குளத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.56 இலட்சம் மதிப்பீட்டில் தடுப்பு சுவர் மற்றும் படித்துறை அமைக்கும் பணிகளையும், பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி முதல் பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சி வரை மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.15.37 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், பஞ்சநதிக்குளம் கிழக்கு ஊராட்சி மேல்நிலைப்பள்ளியில் தேசிய மாணவர் படை முகாமினையும், கூடுதல் கழிப்பறை கட்டுவது குறித்தும், மருதூர் தெற்கு ஊராட்சியில் தமிழ்நாடு கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.67.5 இலட்சம் மதிப்பீட்டில் செல்லைக்கோன் வாய்க்காலின் மேல்கரை சாலை அமைக்கும் பணி நடைபெறுவதையும், மாவட்ட ஆட்சித் தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




முன்னதாக, தலைஞாயிறு பேரூராட்சியில் ரூ.3.95 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் ஓய்வு அறையினை திறந்து வைத்து, அங்கு பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தூய்மைப்பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார். அதனை தொடர்ந்து வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் வாய்மேடு ஊராட்சியில் 15ஆவது மத்திய நிதிக்குழு மான்யம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.68.8 இலட்சம் மதிப்பீட்டில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம், அண்ணாப்பேட்டை ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.65 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், கட்டுவதற்கான பூமி பூஜையினையும், மற்றும் ஆயக்காரன்புலம்-1 ஊராட்சியில் மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும்; 15ஆவது மத்திய நிதிக்குழு மான்யம் திட்டத்தின் கீழ் ரூ.11.62 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் கூடுதல் ஆட்சியர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ம.பிரதிவிராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் அவர்கள் திறந்து வைத்தனர்.
இந்த ஆய்வின்போது ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ப.ராஜூ, எஸ்.ஆர்.பாஸ்கர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா .

