திருச்செந்தூர் அக்.31,
உலக புகழ்பெற்ற திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா நேற்று (30.10.2022) வெகு சிறப்பாக நடைபெற்றது.
திருச்செந்தூர் கடற்கரையில் நேற்று மாலையில் நடைபெற்ற சூரசம்ஹாரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, தமிழகம் மட்டுமல்லாலம் உலகம் முழுவதிலும் இருந்து திருச்செந்தூர் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்தனர்.
இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே தென்திருநள்ளாறு என்னும் திருநாணல்காடு ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத திருகண்டேஸ்வரர் திருக்கோயில் பக்தர்கள் சார்பாகவும், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் அன்னதானம் அறக்கட்டளை சதுரகிரி சித்தர் ஞான பீடம் ஆத்தூர் சார்பாகவும் அன்னதானம் வழங்கப்பட்டது.


அன்னதான நிகழ்ச்சி ஏற்பாடுகளை முருகன் சுவாமி, சிவராமசுவாமி, சிவ மா. தங்கராஜ், பொன்சிங், நாணல்காடு அருணகிரி, சங்கர் ஆகியோர் முன்நின்று நடத்தினர்.
திருச்செந்தூர் கந்தசஷ்டிக்கு வருகை தந்த பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு அன்னதான குழுவினரை மனதார பாராட்டினர்.

