நாகை மாவட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் அக்டோபர் 29
நாகப்பட்டினம் மாவட்டம் நாகப்பட்டினம் நகராட்சிகுட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ் செய்தியாளர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட புதுத்தெருவில் உள்ள நகரவை முஸ்லிம் தொடக்கப்பள்ளி, சர்அகமதுத்தெருவில் உள்ள நகராட்சி முஸ்லிம் தொடக்கப்பள்ளி மற்றும் வேதநாயகம் செட்டித்தெருவில் உள்ள நகரவை தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு உணவு வழங்கப்படுவதையும், ஆரியநாட்டுத்தெருவில் உள்ள அங்கன்வாடி மையம், நம்பியார்நகரில்; உள்ள சிறிய மீன்பிடி துறைமுகத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மண்திட்டுகளை அகற்றும் பணிகள் நடைபெறுவதையும், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியினையும்,மாவட்ட அரசு மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து நாகப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்படும் நூறு நாள் வேலை குறித்த பதிவேடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் வி.சகிலா, நாகப்பட்டினம் சார் ஆட்சியர் பானோத் ம்ருகேந்தர் லால் நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி, ஊரகவளர்ச்சி முகமை செயற்பொறியாளர் என்.பசுபதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

