நாகப்பட்டினம் அக்டோபர் 29
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழகமக்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்காக பல எண்ணற்ற திட்டங்களை எல்லாம் தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக தாய்மார்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்.
இரண்டு மற்றும் இரண்டிற்கும் மேற்பட்ட குழந்தைகளை உடைய உயர் வரிசை பிறப்பு பிரசவங்களை தவிர்ப்பதன் மூலம் 20 விழுக்காடு மகப்பேறு மரணங்கள் தவிர்க்க முடியும். இதன் அடிப்படையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள உயர் பிறப்பு வரிசை தாய்மார்களை நிரந்தர குடும்ப நல முறைக்கு உட்படுத்துவதற்காக நாகப்பட்டினம் தாய் காக்கும் திட்டம் 15.12.2021 முதல் துவங்கப்பட்டு அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடைபெற்று வருகின்றன. திட்டத்தின் மூலம் பயனடையும் தாய்மார்களுக்கு தமிழக அரசு வழங்கும் ரூ.600 உதவித்தொகையுடன் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் சிறப்பு நிதியாக ரூ.1400 கூடுதலாக சேர்த்து ரூ.2000 வழங்கப்படுவதுடன், ஏராளமான நல உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தினால் இதுவரை 31 தாய்மார்கள் பயனடைந்துள்ளனர்.

வம்சம் திட்டமானது 24ஒ7 தாய் சேய் நல கட்டுப்பாட்டு மையம் 94423 74310 என்ற அலைபேசி எண்ணின் மூலமும், 04365-250310 என்ற தொலைபேசி எண்ணின் மூலமும் அனைத்து கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தொடர்பு கொள்ளும் வகையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் 4.3.2022 அன்று துவங்கப்பட்ட செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரசவத்தின் போதும் பிரசவத்திற்கு பின்பு ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் மேற்கண்ட எண்ணை தொடர்பு கொண்டு விளக்கங்கள் பெறலாம். கருக்கலைப்பு மற்றும் அது தொடர்பான அனைத்து செய்திகளையும் மருத்துவரின் ஆலோசனைகள் பெயரில் அனைத்து அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருந்துகள் பெற்றுக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் குடும்ப நலத் துறையின் சார்பாக குடும்ப கட்டுப்பாடு குறித்த முறைகளையும் இந்த தொலைபேசி எண்ணின் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
வம்சம் திட்டத்தின் தொலைபேசி எண்ணின் மூலம் அழைப்பு விடுத்த பயனாளிகள் மொத்தம் 242 அவற்றில் அதிக ஆபத்துடைய பிரசவங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் 191, குடும்ப நலம் தொடர்பான பயனாளிகள் 21, கருக்கலைப்பு தொடர்பான பயனாளிகள் 24, சுகாதார நலத்திட்டங்கள் தொடர்பான பயனாளிகள் 06, மேலும், வம்சம் தொலைபேசி எண்ணின் மூலம் நலம் விசாரிக்கப்பட்ட பயனாளிகள் மொத்தம் 5420 அவற்றில் அதிக ஆபத்துடைய பிரசவங்களை எதிர்நோக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் 3562, சிக்கல் இல்லாத பிரசவங்களை எதிர் நோக்கம் தாய்மார்கள் 539, முன் கவனிப்பு தாய்மார்கள் 346, பின் கவனிப்பு தாய்மார்கள் 973 ஆகும்.
தொகுப்பு: மீ.செல்வகுமார் பி.காம்.பி.எல்,
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,
நாகப்பட்டினம்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

