வேதாரண்யம் அக்டோபர் 28
நாகப்பட்டினத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றிப் பெற்ற சி.க.சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சி.க.சுப்பையா பிள்ளை அறக்கட்டளை நிறுவனர்தொழிலதிபர் K.மாரியப்பன் அவர்தம் துணைவியார் கௌசல்யாவும்பரிசுத்தொகைகள் வழங்கி பாராட்டினார்கள்.


நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார் .ஆசிரியர் தியாகராஜன் வரவேற்றார். அறக்கட்டளை நிறுவனர் கே. மாரியப்பன் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முதலிடம் பெற்ற வி. மணி பாரதிக்கு ரூபாய் பத்தாயிரம், வட்டுஎறிதலில் முதலிடம் பெற்ற வி. விஜய் .ரூபாய் 10,000,400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் இடம் எஸ். ஜெகதீஸ்வரன் ரூபாய் 5000, மாணவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் அன்பழகன் ரூபாய் பத்தாயிரம் ,தேசிய வருவாய் திறனறித் தேர்வில் மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்ற M.சேரனுக்கு ரூபாய் பத்தாயிரம் என மொத்தம் ரூபாய் 52 ஆயிரம் வழங்கி பாராட்டினார்கள். ஆசிரியர் கோ.ஆதவன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

