நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் கிராம ஊராட்சி சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் அக்டோபர் 28
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளியில் கிராம ஊராட்சி சார்பில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பள்ளி மாணவர்களின் நலனை கருதிற்கொண்டு பல்வேறு நல்லதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மாணவ, மாணவிகள் தங்களையும், தங்களை சார்ந்தவர்களையும் போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக இருக்க வேண்டும். புகையிலை, குட்கா, பான் மசாலா போன்ற அனைத்து தீங்கு விளைவிக்கும் போதைப்பொருள்களை பயன்படுத்தக்கூடாது. நாடு வளர்ச்சி அடைவதில் முழு பங்கு மாணவ மாணவிகளிடம் தான் உள்ளது அதனால் இந்த வயதில் நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், நல்ல மரியாதை இவையனைத்திலும் சிறப்பாக இருந்து நன்றாக படித்து வாழக்கையில் நல்ல இடத்திற்கு வர வேண்டும்
மேலும் மாணவர்கள் செல் போன்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் மாணவர்களின் குடும்பத்தை பாதிக்கும். இவை அனைத்தையும் தவிர்த்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க நிறைய திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆகவே படித்தால்தான் பெரிய வேலைகளில் அமர முடியும். என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, நான், எனது நண்பர்கள் மற்றும் எனது குடும்பத்தினர்கள் உள்ளிட்ட எவரையும் போதைப்பொருட்களை பயன்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி அளிக்கிறேன் என்ற கையெழுத்து இயக்கத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இவ்விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ், பிரதாபராமபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.வி.எஸ்.சிவராசு, பள்ளி தலைமையாசிரியர் எம்.பி. மகேஸ்வரன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

