கொடைக்கானல், அக்,28
மருது பாண்டியர் குருபூஜை விழாவையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அன்னதானம் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.
இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னோடிகளான மருது சகோதரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராட்டம் நடத்திய வீரர்கள். ஆங்கிலேயர்களை எதிர்க்க தேசிய அளவில் அணி உருவாக்கியபோது இவர்களை அழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆங்கிலேயர்கள் ஆளாகினர்.
மருது சகோதரர்கள் என்று அழைக்கப்பட்ட மருது பாண்டியர்கள் 1758 முதல் 1801 வரை தங்களது போராட்டத்தை தீவிரமாக முன்னெடுத்திருந்தனர்.மருது சகோதரர்கள்
ஆங்கிலயர்களை இந்திய மண்ணிலிருந்து விரட்ட இறுதி வரை ஆயுதம் தாங்கி போராடி, வீர மரணம் அடைந்து, வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தனர்.
பெரிய மருது, சின்ன மருது என்றழைக்கப்படும் மருது சகோதரர்களின் 221-வது நினைவு தினம் 27/10/2022 கடைபிடிக்கப் பட்டது.
ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் 27ம் தேதியன்று குருபூஜை விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் நடைபெற்ற குருபூஜை முன்னிட்டு தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சியின் சார்பில் அதன் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கோடை ஆனந்த் சிறப்பான ஏற்பாட்டின் படி கொடைக்கானலில் மாமன்னர் மருது சகோதரர்களின் குருபூஜை விழா அனுசரிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மருது சகோதரர்களின் திருஉருவ படத்திற்கு
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக்
கட்சியின் நிறுவனத் தலைவர் உசிலை சிங்கம் வழக்கறிஞர் எம். சங்கிலி, தலைமையில் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வதிலை செல்வம், மற்றும் மாநில அமைப்பு செயலாளர் ஆர்.கே.ஆனந்தன் ஆகியோர் முன்னிலையில்
தமிழ் தேசிய பார்வர்ட் பிளாக் கட்சி நிர்வாகிகள்
மருது சகோதரர்கள் சிலைக்கு
மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து கொடைக்கானலில் பல இடங்களில்
தமிழ் தேசிய பார்வர்ட் கட்சியின் கொடிகள் கம்பங்கள் அமைக்கப்பட்டது. மேலும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ரொட்டி, பன் பழங்கள் போன்ற ஊட்டச்சத்து பொருள்கள் வழங்கப்பட்டன. மேலும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று அவர்களுக்கு அறுசுவை உணவுகள் பரிமாறப்பட்டது. இந்த விழா ஏற்பாட்டினை தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர் கொடைக்கானல் ஆனந்த் சிறப்பாக செய்திருந்தார்.
மருது சகோதரர்
குருபூஜை விழா கொடைக்கானலில் தமிழ் தேசிய பார்வர்ட் கட்சி சார்பில் அதன் நிறுவனத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் போது
தமிழ் தேசிய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநில தொழிற்சங்க தலைவர் .
நாகேந்திரன், மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் தர்மர்,திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் சரவணகுமார், திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆர்.சதன் வேட்டையன், திண்டுக்கல் மாவட்ட மாணவரணி பொதுச் செயலாளர் A.நவீன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் பிரசாத் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.மருதுஜிதேவர்,கொடைக்கானல் நகர தலைவர் J. பிரேம், நகர துணை தலைவர் R. ரமேஷ், நகர பொருளாளர் S. ரமேஷ், நகர இளைஞர் அணி தலைவர்,
E.சிவகுமார், மதுரை புறநகர் மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர்கள் வீரபாண்டி, செல்லம், வத்தலக்குண்டு ஒன்றிய செயலாளர் முருகன், மற்றும் திண்டுக்கல், மதுரை புறநகர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைக்கானல், நகர, ஒன்றிய நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

